குழந்தைகளுக்கான சர்வதேச ஓவியப் போட்டி 2018
கிளிண்ட் நினைவாக
Picture of Edmund Thomas Clint

எட்மண்ட் தாமஸ் கிளிண்ட்


கேரளாவின் கொச்சியைச் சேர்ந்த திரு. எம்.டி. ஜோசப் மற்றும் சின்னம்மா ஜோசப் ஆகியோரின் ஒரே மகன் எட்மண்ட் தாமஸ் கிளிண்ட் நாள்பட்ட நோயினால் அவனுடைய சிறுநீரகம் பாதிக்கப்பட்ட காரணத்தினால் தனது பிஞ்சு வயதிலேயே அவர் இறந்துவிட்டான், இறந்தபோது அவனுடைய வயது 2522 நாட்கள். ஆனால் அவன் மிகவும் இளம் வயதிலேயே வரைவதிலும் வண்ணம் தீட்டுவதிலும் தனிச்சிறப்பு வாய்ந்த திறன்களை வெளிப்படுத்தினான்.

இந்த உலகில் தான் கண்ணுற்ற விஷயங்களைச் சித்தரிக்கின்ற வரைபடங்களையும் ஓவியங்களையும் உருவாக்குவதற்கு சாக்பீஸ், கிரையான்கள், ஆயில் பெயிண்ட் மற்றும் வாட்டர் கலர் போன்ற எல்லா ஊடகங்களையும் கிளிண்ட் பயன்படுத்தினான். அவனுடைய ஓவியங்கள் கலை ஆர்வலர்களையும் விமர்சகர்களையும் வியக்க வைத்தன. அவனுடைய முதிர்ச்சி அவர்களைப் பிரம்மிக்க வைத்தது மற்றும் அவர்கள் அவனுடைய மேதமைத் திறனைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர்.

தன்னுடைய ஏழு வயதை எட்டுவதற்கு ஒரு மாதம் எஞ்சியிருக்கும்போதே இம் மண்ணுலகிலிருந்து உயிர் நீத்த கிளிண்ட் தனது கலைப் படைப்பின் புதையலை விட்டுச்சென்றிருக்கிறான். மக்களின் உணர்ச்சிகளைப் பற்றிப் புரிந்துகொள்ளும் தனித்துவமிக்க திறமையை அவன் பெற்றிருந்தான், மற்றும் இந்தச் சக்திவாய்ந்த மனவெழுச்சிகளிலிருந்து அவன் உத்வேகம் பெற்றான். இளம் வயதினராக இருந்தபோதிலும் கூட, மரணம், ஏகாந்தம் மற்றும் அன்பு போன்ற தீவிரமான கருப்பொருள்களைச் சித்தரிக்கின்ற ஓவியங்களை அவன் உருவாக்கினான். ஒரு கலைஞர் என்பதைத் தாண்டி, கிளிண்ட் ஒரு தீவிர வாசகனாகவும் இருந்தான். இராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாச நாடகங்களால் அவன் ஈர்க்கப்பட்டான் மற்றும் ராபின்சன் குரூசோ போன்ற சாகசக் கதைகளைக் கேட்பதிலும் அவன் ஆர்வமாக இருந்தான். இந்தக் கதைகளில் விவரிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு விளக்கத்தையும் அவன் மனதில் உள்வாங்கிக்கொண்டு தன்னுடைய கலை வாயிலாக அவற்றை வெளிப்படுத்தினான்.

Girls picking flowers
Kathakali
Raavanan
Pooram
Snake Boat
Theyyam
Sunset
Kavadi Festival
Village Temple Festival

கிளிண்டின் தந்தை பிரபல ஹாலிவுட் நடிகர், கிளிண்ட் ஈஸ்ட்வுட்டின், தீவிர ரசிகர். ஆகவே அவர் தன்னுடைய மகனுக்கு அந்த நடிகரின் பெயரை வைத்தார். கிளிண்ட் மறைவுக்குப் பின்னர், இந்தியாவின் பிரபல ஆவணப்பட இயக்குநர் சிவக்குமார், இந்த இளம் கலைஞரின் வாழ்க்கையையும் படைப்புகளையும் பற்றிய ஒரு ஆவணப்படம் எடுத்தார். இந்தப் படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் காண்பிக்கப்பட்டது. அவ்வாறு ஒருமுறை பிரேசிலில் காண்பிக்கப்பட்டபோது கிளிண்ட் ஈஸ்ட்வுட் அந்த ஆவணப்படத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. கிளிண்டின் கதையால் மிகவும் மனம் நெகிழ்ந்த நடிகர், கிளிண்டின் அகால மரணத்துக்கு தன்னுடைய ஆழ்ந்த துக்கம் தெரிவித்து அந்தக் குழந்தையின் பெற்றோர்களுக்கு இரங்கல் செய்தி அனுப்பினார்.