குழந்தைகளுக்கான சர்வதேச ஓவியப் போட்டி 2018
கிளிண்ட் நினைவாக
Picture of Edmund Thomas Clint

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்


 1. உலகம் முழுவதும் எல்லா நாடுகளைச் சேர்ந்த குழந்தைகளும் ஆன்லைன் ஓவியப் போட்டியில் பங்கேற்கலாம். இந்தப் போட்டி நான்கு முதல் பதினாறு வயதுகளுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்குரியது (01.09.2002 அன்று/அதற்குப் பின்னர் மற்றும் 01.09.2014 அன்று/அதற்கு முன்னர் பிறந்தவர்கள்) என்பதால், அவர்களுடைய பெற்றோர்கள் அல்லது சட்டப்பூர்வப் பாதுகாவலர்கள் இங்கு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை சுயமாகவோ அல்லது அவர்களுக்கு விருப்பமான ஒரு மொழிபெயர்ப்பாளரின் ஆதரவுடனோ படித்துப் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டும்.
 2. இந்தியக் குடியரசு நாட்டின் எல்லாச் சட்டங்களும் இந்தப் போட்டிக்குப் பொருந்தும்.
 3. விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதன் மூலம், போட்டியாளரும் அவருடைய பெற்றோர் அல்லது சட்டப்பூர்வப் பாதுகாவலரும் இந்தப் போட்டிக்குரிய எல்லா விதிகளையும், மற்றும் ஒழுங்குவிதிமுறைகளையும் ஏற்றுக்கொள்கின்றனர்.
 4. கேரள சுற்றுலாத் துறை குறிப்பிட்ட காரணம் எதையும் தெரிவிக்காமல் இந்தப் போட்டியைப் பகுதியளவோ அல்லது முழுமையாகவோ இரத்து செய்வதற்கான அல்லது போட்டியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை பகுதியளவோ அல்லது முழுமையாகவோ மாற்றியமைப்பதற்கான உரிமையைக் கொண்டுள்ளது.
 5. இந்தப் போட்டி தொடர்பாக அல்லது இந்தப் போட்டியின் விளைவாக எழுகின்ற எந்த ஒரு சர்ச்சையையும் பற்றி முடிவெடுப்பதற்கான மற்றும் / அல்லது தீர்த்து வைப்பதற்கான இறுதி அதிகாரத்தை கேரள அரசாங்கத்தின் சுற்றுலாத் துறைச் செயலர் பெற்றுள்ளார், மற்றும் செயலரின் தீர்ப்பே இறுதியானதாக இருக்கும். அதோடு, அத்தகைய விவகாரங்களில் எந்த மேல்முறையீடும் செய்ய முடியாது.
 6. இந்தப் போட்டிக்குப் பதிவு செய்தவர் கேரளாவின் ஏதாவது ஒரு அம்சம் பற்றிப் படம் வரைய வேண்டும். மேற்கோளுக்காக கேரளாவில் கிடைக்கின்ற புகைப்படங்களையும் காணொளிகளையும் அவர் பயன்படுத்திக்கொள்ளலாம். ஓவியத்தின் ஸ்கேன் செய்த படம் ஆன்லைன் சமர்ப்பிப்பு முறை மூலம் இணையதளம் வாயிலாக கேரளாவின் சுற்றுலாத் துறைக்கு அனுப்பப்பட வேண்டும். கேரள சுற்றுலாத்துறை கேட்டுக்கொள்ளும் பட்சத்தில் போட்டியாளர் அசல் ஓவியத்தைத் தன்னுடைய செலவில் அனுப்பி வைக்கவேண்டும்.
 7. கேரள சுற்றுலாத் துறை தன்னுடைய விளம்பர அல்லது அபிவிருத்திச் செயல்பாடுகளுக்காக போட்டியின்போது பெறப்பட்ட பதிவுகளைப் பயன்படுத்துவதற்கான பிரத்தியேகமல்லாத உரிமையைப் பெற்றுள்ளது.
 8. இந்தப் போட்டி தொடர்பான தகவல்தொடர்புகள் அனைத்து ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும்.

விரிவான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பாருங்கள்

போட்டிக்கான அட்டவணை


 1. இந்தப் போட்டிக்கான பதிவு செப்டம்பர் 1, 2018 அன்று தொடங்குகிறது. பதிவுச் சரிபார்ப்புச் செயல் முடிந்தவுடன் உங்கள் படைப்புகளை நீங்கள் சமர்ப்பிக்கத் தொடங்கலாம்.
 2. ஜனவரி 31, 2019 வரை பதிவுகளைச் சமர்ப்பிக்க முடியும்.
 3. மிகச் சிறந்த 2000 படங்கள் ஒரு குழுவினால் தேர்ந்தெடுக்கப்பட்டு 31 மார்ச் 2019 அன்று வெளியிடப்படும்.
 4. வெற்றியாளர்கள் 2 மே 2019 க்கு அறிவிக்கப்படுவார்கள்.