குழந்தைகளுக்கான சர்வதேச ஓவியப் போட்டி 2018
கிளிண்ட் நினைவாக
Picture of Edmund Thomas Clint

எப்படிப் பங்கேற்பது


 1. (01.09.2002 அன்று/அதற்குப் பின்னர் மற்றும் 01.09.2014 அன்று/அதற்கு முன்னர் பிறந்தவர்) குழந்தைகள், உலகின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் இந்தப் போட்டியில் பங்கேற்க முடியும்.
 2. இந்த ஓவியப் போட்டியில் பங்கேற்பதற்குக் கட்டணம் ஏதுமில்லை.
 3. இது குழந்தைகளுக்கான (4-16 வயதுடையவர்கள்) ஓவியப் போட்டி என்பதால், பெற்றோர் அல்லது பாதுகாவலர் அவர்களின் சார்பாக பதிவுப் படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
 4. பதிவு செய்தவுடன், பதிவு செய்தவருக்கு சரிபார்ப்புக்கான மின்னஞ்சல் ஒன்று அனுப்பப்படும்.
 5. பதிவு செய்தவர் சரிபார்ப்புக் குறியீடு மீது கிளிக் செய்தவுடன், பதிவுச் செயல்முறை முடிவடைகிறது.
 6. ஓவியப் போட்டிக்கான கருப்பொருள் 'கேரளா'. ஆகும். பங்கேற்பாளர் கேளராவின் ஏதாவது ஒரு அம்சத்தைப் பற்றி ஓவியம் வரையலாம்.
 7. ஓவியம் பிரஷ் மற்றும் பெயிண்ட் மூலம் காகிதத்தில் கையால் வரையப்பட்டதாக இருக்க வேண்டும். வண்ணம் தீட்டுவதற்கு பங்கேற்பாளர் தனக்குப் பிடித்த எந்தப் பொருளையும் (வாட்டர் கலர், கிரையான்கள் போன்றவை) பயன்படுத்தலாம்.
 8. ஓவியத்தை வரைந்து முடித்தவுடன், பாதுகாவலர் அல்லது பெற்றோர் கேரள சுற்றுலாத்துறை இணையதளத்தில் போட்டிக்கான பக்கத்தில் உள்நுழைந்து உங்கள் ஓவியத்தின் ஸ்கேன் செய்த படத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். ஓவியத்தின் கோப்பு அளவு 5 எம்பி –க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
 9. பதிவினைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி 31 ஜனவரி 2019 ஆகும்.
 10. போட்டியாளர் ஒரே ஒரு முறை மட்டுமே பதிவு செய்ய முடியும், ஆனால் அவர் விரும்பினால் ஒன்றுக்கு மேற்பட்ட படைப்புகளை, அதிகபட்சமாக ஐந்து படைப்புகள் வரை, சமர்ப்பிக்கலாம். ஆயினும், ஒரு போட்டியாளரின் சமர்ப்பிப்புகள் அனைத்தும் ஒரே உள்நுழைவு முகவரியின் கீழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
 11. சட்டப்பூர்வப் பாதுகாவலர் அல்லது பெற்றோர் ஒன்றுக்கு மேற்பட்ட போட்டியாளரைப் பதிவு செய்ய விரும்பினால், பதிவு செய்வதற்கு தனித்தனி மின்னஞ்சல் முகவரிகளைப் பயன்படுத்த வேண்டும். வேறு வகையில் கூறினால், ஒரு மின்னஞ்சல் முகவரியை ஒரு போட்டியாளர் மட்டுமே பயன்படுத்த முடியும்.

இப்பொழுது பதிவு செய்யுங்கள்