குழந்தைகளுக்கான சர்வதேச ஓவியப் போட்டி 2018
கிளிண்ட் நினைவாக
Picture of Edmund Thomas Clint

ஆச்சரியமான பரிசுகள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன!


உங்கள் குழந்தை பெறும் வெற்றியால் ஒரு விடுமுறைப் பயணம் செல்வது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சிறப்புக்குரியதாகத் தெரிகிறது! இல்லையா? உங்கள் குழந்தைக்கு ஓவியம் வரைவதற்கான வாய்ப்புக் கொடுப்பதன் மூலம் உங்களுக்கு எப்பொழுதும் பிடித்தமான ‘கடவுளின் தேசமாகிய கேரளாவுக்கு’ ஐந்து இரவுகளுக்கான சுற்றுப்பயணம் செல்வதற்கான ஒரு வாய்ப்பு இங்கு காத்திருக்கிறது.  

கிளிண்ட் நினைவு சர்வதேச குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி அதிர்ஷ்ட வெற்றியாளர்களுக்கு ஆச்சரியமூட்டும் பரிசுகளை வழங்குகிறது.

பரிசுகள் ஐந்து வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன:

உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் கேரளாவுக்கான பயணம்!

10 வெற்றியாளர்கள்

இந்தியாவுக்கு வெளியில் வசிக்கின்ற, உலகின் இதர பகுதிகளைச் சேர்ந்த 10 வெற்றியாளர்கள் கேரளாவுக்கு ஐந்து இரவுகள் குடும்பத்துடன் சுற்றுப்பயணம் செல்வதற்கான வாய்ப்புப் பெறுகிறார்கள். இந்தப் பயணத்தின்போது வெற்றியாளர்கள் தங்களுக்குத் துணையாக இரண்டு பேரை அழைத்துவர முடியும்.

இந்த அமைதி பூமியில் மகிழ்ச்சியான குடும்பப் பயணத்துக்குத் தயாராகுங்கள்!

20 வெற்றியாளர்கள்

வெளிநாட்டைச் சேர்ந்த அடுத்த 20 வெற்றியாளர்களுக்கு நினைவுப் பரிசுகள்.

இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்தும் கேரளாவுக்கான பயணம்!

5 வெற்றியாளர்கள்

இந்தியாவைச் சேர்ந்த 5 வெற்றியாளர்கள் கேரளாவுக்கு ஐந்து இரவுகள் குடும்பத்துடன் சுற்றுப்பயணம் செல்வதற்கான வாய்ப்புப் பெறுகிறார்கள். இந்தப் பயணத்தின்போது வெற்றியாளர்கள் தங்களுக்குத் துணையாக இரண்டு பேரை அழைத்துவர முடியும்.

நாட்டில் உள்ள மிக அழகான மாநிலங்களில் ஒன்றில் உங்கள் குடும்பத்தினருடன் ஒரு சில நாட்களைச் செலவழிப்பதை விட அதிகமான உற்சாகம் உங்களுக்கு எதிலிருந்து கிடைக்கும்?!

25 வெற்றியாளர்கள்

இந்தியாவைச் சேர்ந்த அடுத்த 25 வெற்றியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.10,000/- ரொக்கப் பரிசு.

கேரளாவைச் சேர்ந்த பங்கேற்பாளர்களுக்கு ஆச்சரியமூட்டும் பரிசுகள்!

40 வெற்றியாளர்கள்

கேரளாவைச் சேர்ந்த பங்கேற்பாளர்களுக்காக சிறப்பு ரொக்கப் பரிசுகள் காத்திருக்கின்றன!

கேரளாவைச் சேர்ந்த 40 வெற்றியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.10,000/- ரொக்கப் பரிசு.

இந்தியாவுக்கு வெளியில் வசிக்கும் ஊக்குவிப்பாளர்களுக்கு

5 வெற்றியாளர்கள்

அதிக எண்ணிக்கையில் போட்டியாளர்களைப் பதிவு செய்கின்ற இந்தியாவிற்கு வெளியில் வசிக்கின்ற முதல் ஐந்து ஊக்குவிப்பாளர்களுக்கு கேரளாவில் உள்ள இடங்களைப் பார்வையிடுவதற்கு ஐந்து நாட்களுக்கான சுற்றுலாத் தொகுப்பு வழங்கப்படும்.

இந்தியாவில் (கேரளாவுக்கு வெளியில்) வசிக்கும் ஊக்குவிப்பாளர்களுக்கு

5 வெற்றியாளர்கள்

அதிக எண்ணிக்கையில் போட்டியாளர்களைப் பதிவு செய்கின்ற இந்தியாவைச் சேர்ந்த, ஆனால் கேரளாவுக்கு வெளியில் வசிக்கின்ற ஐந்து ஊக்குவிப்பாளர்களுக்கு கேரளாவில் உள்ள இடங்களைப் பார்வையிடுவதற்கு ஐந்து நாட்களுக்கான சுற்றுலாத் தொகுப்பு வழங்கப்படும்.மொத்தம் 110 வெற்றியாளர்கள்!!!

15 வெற்றியாளர்களுக்கு குடும்பத்துடன் கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்பு!

10 வெற்றியாளர்களுக்கு தனியாக சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்பு!


பதிவு செய்யுங்கள் இன்றே! மிகப் பெரிய ஆன்லைன் ஓவியப் போட்டிக்காக.