Trade Media
     

மூணாறு


இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வரும் மிகவும் பிரசித்தி பெற்ற இடமாக உள்ளது. முத்திரபுழா, நல்லதண்ணி மற்றும் குண்டலா ஆகிய மூன்று மலை நீரோடைகள் கூடும் இடத்தில் உள்ள இந்த இடம் கடல் மட்டத்திலிருந்து 1600 மீ உயரத்தில் உள்ளது. தென்னிந்தியாவில் இருந்த முன்னாள் பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள் கோடை காலங்களில் வந்து தங்கும் இடமாக மூணாறு இருந்துள்ளது.

பரந்த அளவிலான தேயிலைத் தோட்டங்கள், குடியேற்ற பங்களாக்கள், சிற்றோடைகள், அருவிகள், குளிர்ச்சியான காலநிலை ஆகியவை இந்த மலைவாழிடத்தின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். மலையேற்றம் மற்றும் மலை சவாரி ஆகியவற்றிக்கு ஏற்ற இடமாகும்.

இப்போது நாம் மூணாறைச்சுற்றி அமைந்துள்ள, சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பதற்கு ஏற்ற வாய்ப்புகள் பற்றி ஆய்வு செய்வோம்.

எரவிகுளம் தேசிய பூங்கா
மூணாறைச் சுற்றியுள்ள இடங்களுள் மிகவும் பார்க்கத்தக்க ஒன்று எரவிகுளம் தேசியப் பூங்கா ஆகும். மூணாறிலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள இந்தப் பூங்கா பயங்கரமான காட்டு விலங்கான நீலகிரி தாருக்குப் புகழ் பெற்றதாகும். 97 ச.கி.மீ பரப்பளவில் பரந்து காணப்படும் இந்தப் பூங்கா அரியவகை பட்டாம்பூச்சிகள், விலங்குகள் மற்றும் பறவைகள் ஆகியவை வாழும் இடமாக உள்ளது. மலையேற்றத்திற்கு உகந்த தேயிலைத் தோட்ட காட்சிகள் மற்றும் மஞ்சு சூழ்மலைகள் போன்ற விந்தையான காட்சிகளை வழங்குகிறது. இந்தப் பூங்கா நீலகுறிஞ்சியால் போர்த்தப்பட்டது போல் பூத்து நிற்கும் காலத்தில் வெப்பமான இடமாக மாறிவிடும். இது மேற்குத் தொடர்ச்சியின் அடிவாரத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் ஒரு மாறுபட்ட இயற்கை விந்தை கொண்ட பூ வகையாகும். கடைசியாக  2006ஆம் ஆண்டு பூ பூத்தது.

ஆனைமுடி சிகரம்
எரவிகுளம் தேசியப் பூங்காவினுள் அமைந்துள்ள இடம் ஆனைமலை சிகரமாகும். தேன்னிந்தியாவின் மிக உயரமான இந்தச் சிகரம் 2700 மீ உயரம் உள்ளது. இந்தச் சிகரத்தில் ஏறுவதற்கு எரவிகுளத்திலுள்ள காடு மற்றும் வனவிலங்கு அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும்.

மாட்டுபெட்டி
மூணாறிலிருந்து 13 கி.மீ தொலைவிலுள்ள மற்றுமொரு அழகிய இடம் மாட்டுபெட்டி ஆகும். கடல் மட்டத்திலிருந்து 1700  மீட்டர் உயரத்திலுள்ள மாட்டுபெட்டி அங்கு கட்டப்பட்டுள்ள அணை மற்றும் அழகான ஏரி மற்றும் அருமையான படகு சவாரிகள் ஆகியவற்றின் மூலம் அந்தக்குன்றினச் சுற்றியுள்ள நிலப்பரப்பினைக் கண்டு மகிழ்வதற்கு ஏற்ற இடமாக உள்ளது. மாட்டுபெட்டி அங்குள்ள உயர்தரமான பால்பண்ணைக்குப் பெயர் பெற்றதாகும். அந்தப் பண்ணை இந்தோ – சுவிஷ் கால்நடை திட்டம் மூலம் நடத்தப்படுகிறது. இங்கு வெவ்வேறு வகையான அதிக பால்தரும் பசுக்களின் இனங்களைக் காணலாம். மாட்டுபெட்டியில் அழகான தேயிலைத் தோட்டங்கள், உருண்டை புல்வெளிகள் மற்றும் சோளக்காடு ஆகியவை இருப்பதோடு மலையேற்றம் மற்றும் பல்வேறு வகை பறைவைகளின் வாழிடாகவும் இது உள்ளது.

பள்ளிவாசல்
மூணாரில் உள்ள சித்திரபுரத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் பள்ளிவாசல் அமைந்துள்ளது. இது கேரளாவின் முதல் நீர்மின்திட்ட இடமாகவும் உள்ளது. இது கண்ணைக்கவரும் அழகிய காட்சிகளைக் கொண்ட இடமாகவும் சுற்றுலாப்பயணிகள் வந்து குவியும் ஒரு சுற்றுலாத் தலமாகவும் உள்ளது.

சின்னக்கானல்
மூணாறு டவுனுக்கு அருகில் உள்ள சின்னக்கானல் மற்றும் இங்குள்ள அருவிகள் கடல் மட்டத்திலிருந்து 200 மீட்டர் உயரத்திலிருந்து விழுவதால் அவை பவர்ஹவுஸ் நீர்வீழ்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. இது மேற்குத்தொடர்ச்சி மலையின் அழகிய காட்சியைக் கொண்ட ஒரு இடமாக உள்ளது.

அணயிரங்கல்
சின்னக்கானலிலிருந்து 7 கி.மீ தொலைவு சென்றால் அணயிரங்கல் என்ற இடத்தைச் சென்று அடையலாம். மூணாறு டவுனிலிருந்து 22 கி.மீ தொலைவு உள்ள அணயிரங்கல் முழுவதும் பசுமையான தேயிலைத் தோட்டங்களாகக் காணப்படும் இந்த அழகிய நீர்த்தேக்கத்திற்கு ஒரு முறை சென்று வருவது மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். அணயிரங்கல் அணையைச் சுற்றி தேயிலைத் தோட்டங்களும் பசுமை மாறாக் காடுகளும் இருக்கும்.

டாப் ஸ்டேஷன்
மூணாறு டவுனிலிருந்து 3 கி.மீ தொலைவிலுள்ள டாப் ஸ்டேஷன் கடல் மட்டத்திலிருந்து 1700 கி.மீ உயரத்தில் உள்ளது. இது மூணாறு – கொடைக்கானல் ரோட்டில் இருக்கும் மிக உயரமான இடமாகும். மூணாறுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் டாப் ஸ்டேஷனின் வியூ பாயிண்ட்டிற்குச் சென்று அழகிய காட்சிகளையும் அண்டை மாநிலமான தமிழ்நாட்டின் காட்சிகளையும் கண்டு மகிழ்வர். மூணாறின் நீலகுறிஞ்சி மலரும் இடங்களுள் ஒன்றாகவும் இது உள்ளது.

தேயிலை அருங்காட்சியகம்
மூணாறு தேயிலைத் தோட்டங்கள் தனக்கென ஒரு பாரம்பரியத்தையும் மதிப்பீட்டையும் கொண்டவையாக உள்ளன. இந்தப் பாரம்பரிய அந்தஸ்தைக் கருத்தில் கொண்டு மூணாறில் உள்ள டாடா தேயிலை மிகவும் உயர்தரமான கூறுகள் கொண்ட தேயிலையின் ஆரம்ப நிலை மற்றும் அதன் வளர்ச்சியின் கேரளாவின் உன்னத நிலை போன்றவற்றை நன்கு தெரிவிக்கும் நோக்கத்தோடு சில ஆண்டகளுக்கு முன்பு ஒரு அருங்காட்சியகம் தொடங்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்திலுள்ள அரியப் பொருட்கள், புகைப்படங்கள் மற்றும் இயந்திரங்கள் யாவும் மூணாறு தேயிலை தோட்டத்தின் தொடக்கம் வளர்ச்சி என அனைத்துக் கதைகளையும் கூறுவதாக உள்ளது. இந்த அருங்காட்சியகம் டாடா தேயிலை எஸ்டேட் அமைந்துள்ள நல்ல தண்ணீர் எஸ்டேட்டில் அமைந்துள்ளது. இது பார்க்கத் தகுந்த இடமாகும்.

அங்கு சென்று அடைவதற்கு
  • அருகிலுள்ள இரயில் நிலையம் : தேனி (தமிழ்நாடு) 60 கி.மீ தொலைவு. சங்கனாச்சேரி 93 கி.மீ தொலைவு.
  • அருகிலுள்ள விமான நிலையம் : மதுரை (தமிழ்நாடு) 140 கி.மீ தொலைவில் உள்ளது. கொச்சின் பன்னாட்டு விமான நிலையம்:190 கி.மீ தொலைவில் உள்ளது.


 
 
Photos
Photos
information
Souvenirs
 
     
Department of Tourism, Government of Kerala,
Park View, Thiruvananthapuram, Kerala, India - 695 033
Phone: +91-471-2321132 Fax: +91-471-2322279.

Tourist Information toll free No:1-800-425-4747
Tourist Alert Service No:9846300100
Email: info@keralatourism.org, deptour@keralatourism.org

All rights reserved © Kerala Tourism 1998. Copyright Terms of Use
Designed by Stark Communications, Hari & Das Design.
Developed & Maintained by Invis Multimedia