Trade Media
     

வர்க்கலா


வர்க்கலா, திருவனந்தபுரம் மாவட்டத்திற்கு வெளியில் அமைந்துள்ள ஒரு அமைதியான நல்ல கிராமமாகும். இங்கு அழகிய கடற்கரை, 2000 ஆண்டுகள் பழைமையான விஷ்ணு கோவில், மற்றும் கடற்கரையிலிருந்து சற்று தொலைவில் உள்ள சிவகிரி முத் ஆசிரமம் ஆகியவை பார்க்கத்தக்க சுற்றுலா இடங்களாகும்.

அழகிய வர்க்கலா கடற்கரையில் அழகிய நீரூற்றுகள் கொண்ட ஒரு அமைதியான தங்கும் வசதி உள்ளது. இந்தக் கடற்கரையிலுள்ள ஒரு சொட்டு நீர் உடலில் பட்டாலும் அது ஆன்மாவையும், பாவங்களையும் கழுவி நிர்மூலமாக்கி விடும் என்று நம்பப்படுகிறது. எனவே இது பாபநாசம் கடற்கரை என்று பெயர் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

2000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஜனார்த்தன சுவாமி கோவில் இந்தக் கடற்கரையிலிருந்து சற்று தொலைவில் கம்பீரமாக நிற்கிறது. மிகப்பெரிய தத்துவஞானியான ஸ்ரீ நாராயண குரு (1856-1928)இன் சிவகிரி முத் இதன் அருகில் உள்ளது. ஒவ்வொரு வருடமும் நாராயண குரு சமாதி உள்ள இடமான இங்கு (இறந்த இடம்) ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிவகிரி புண்ணிய பயண நாட்களான டிசம்பர் 30லிருந்து ஜனவரி 1-ம் நாள் வரை இங்கு வந்து கூடுவர். ஸ்ரீ நாராயண குரு அவர்கள் 'ஒன்றே குலம், ஒரே மதம், ஒருவரே கடவுள்' என்று சமுதாயத்தில் புரையோடிக் கிடந்த சாதிமுறையை கிழித்தெறிய பிரச்சாரம் செய்தவர் ஆவார்.

வர்க்கலா வில் சுற்றுலா பயணிகளுக்காக அருமையான தங்கும் வசதிகள் செய்து தரப்படுகின்றன. மிகவும் விரைவாக வளர்ந்து வரும் பல ஆயுர்வேதிக் மசாஜ் மையங்கள் அங்கு உள்ளன.

கவருவன : கடற்கரை, மினரல் வாட்டர் நீரூற்று, சிவகிரி முத் மற்றும் 2000 வருடம் பழைமையான விஷ்ணு கோவில்.

இருப்பிடம் : திருவனந்தபுரம் நகரிலிருந்து 51 கி.மீ வடக்கு மற்றும் கொல்லத்திலிருந்து 37 கி.மீ. தெற்கு, திருவனந்தபுரம் மாவட்டம், தெற்கு கேரளா.

அங்கு சென்று அடைவதற்கு :
  • அருகிலுள்ள இரயில் நிலையம் : வர்க்கலா – 3 கி.மீ தொலைவு.
  • அருகிலுள்ள விமான நிலையம் : திருவனந்தபுரம் பன்னாட்டு விமான நிலையம்;, 57 கி.மீ தொலைவு.


 
 
Photos
Photos
information
Souvenirs
 
     
Department of Tourism, Government of Kerala,
Park View, Thiruvananthapuram, Kerala, India - 695 033
Phone: +91-471-2321132 Fax: +91-471-2322279.

Tourist Information toll free No:1-800-425-4747
Tourist Alert Service No:9846300100
Email: info@keralatourism.org, deptour@keralatourism.org

All rights reserved © Kerala Tourism 1998. Copyright Terms of Use
Designed by Stark Communications, Hari & Das Design.
Developed & Maintained by Invis Multimedia