குழந்தைகளுக்கான சர்வதேச ஓவியப் போட்டி 2018
கிளிண்ட் நினைவாக
Picture of Edmund Thomas Clint

அதிகமாகக் கேட்கப்படும் கேள்விகள்


4 முதல் 16 வயதுக்குட்பட்ட எந்தக் குழந்தையும், (01.09.2002 அன்று/அதற்குப் பின்னர் மற்றும் 01.09.2014 அன்று/அதற்கு முன்னர் பிறந்தவர்) உலகின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் இந்தப் போட்டியில் பங்கேற்க முடியும்.
நீங்கள் ஒரு ஊக்குவிப்பாளராக உங்களைப் பதிவு செய்துகொள்ளலாம், உங்களுடைய பரிந்துரையின் அடிப்படையில் போட்டியில் சேர்கின்ற எந்தக் குழந்தையும் உங்களுடைய புள்ளிகள் கணக்கில் சேர்க்கப்படும். அதிகமான நபர்களைப் பரிந்துரைக்கின்ற ஊக்குவிப்பாளர்களுக்கும் கூட கேரளாவைச் சுற்றிப் பார்ப்பதற்கான சுற்றுலாத் தொகுப்புகள் வழங்கப்படும்.
18 வயது பூர்த்தியடைந்த எவரும் இந்தப் போட்டிக்கான ஊக்குவிப்பாளராகப் பதிவு செய்துகொள்ள முடியும். இந்தச் செயல் உங்களுடைய விருப்பம் சார்ந்ததாகும், மற்றும் ஊக்குவிப்பாளர்களுக்கு எந்த வகையான ஊதியமும் வழங்கப்பட மாட்டாது.
எல்லை, இந்தப் போட்டியில் சேர்வதற்குக் கட்டணம் ஏதுமில்லை.
பங்கேற்பாளர் கிரையான்கள், வண்ணப் பென்சில்கள் அல்லது பெயிண்ட் மற்றும் பிரஷ் அல்லது ஸ்கெட்ச் பேனாக்களைப் பயன்படுத்தி கையால் காகிதத்தில் படம் வரைய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிஜிட்டல், மின்னணு அல்லது இயந்திரக் கருவிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட எந்தப் படமும் போட்டியில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. படத்தை வரைந்த பின்னர் அது ஏதேனும் ஒரு முறையைப் பயன்படுத்தி டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றப்பட்டு கேரள சுற்றுலாத்துறையின் போட்டிப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் (கோப்பு அளவு 5 எம்பி-யை விட அதிகமாக இருக்கக்கூடாது).
போட்டியாளர் ஒரு முறை மட்டுமே பதிவு செய்ய முடியும், ஆனால் அவர் விரும்பினால் ஐந்து ஓவியங்கள் வரை சமர்ப்பிக்கலாம்.
இந்தப் போட்டிக்கான கருப்பொருள் கேரளா! ஓவியம் கேரளா சம்பந்தப்பட்ட எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உங்களுடைய பார்வைக்காக, நாங்கள் அழகான படங்களைக் கொண்ட காணொளி மற்றும் புகைப்படச் சிற்றேடுகளையும், காணொளிகளையும் உருவாக்கியிருக்கிறோம். உங்களுக்குத் தேவையான அனைத்தையும் நீங்கள் இங்கு பெற முடியும்.