படைப்பாற்றலின் தெறிப்பு
சர்வதேச சிறுவர்களுக்கான ஆன்லைன் ஓவியப் போட்டியின் மூன்றாவது பதிப்பை அறிமுகப்படுத்துவதில் கேரள சுற்றுலாத்துறை உற்சாகமாக உள்ளது. உலகெங்கிலும் உள்ள குழந்தைகள் தங்கள் படைப்புகளை அனுப்பியதன் மூலம் முதல் இரண்டு சீசன்கள் மாபெரும் வெற்றியைப் பெற்றன.
மூன்றாவது சீசன் மிகவும் உற்சாகமாகவும் பொழுதுபோக்காகவும் இருக்கும் என்று உறுதியளிக்கிறோம். போட்டியின் மையக்கரு 'கேரள கிராம வாழ்க்கை' . 4 முதல் 16 வயதுக்குட்பட்ட உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் எந்தவொரு குழந்தையும் ஆன்லைனில் தங்கள் உள்ளீடுகளை சமர்ப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்டசாலிகள் கேரளாவில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல ஐந்து இரவு குடும்பப் பயணத்தை ஸ்பான்சர்ஷிப் மூலம் பெறுவார்கள்.
மேலும் படிக்ககேரள பயணத்தை வென்றெடுக்க
உங்கள் குழந்தைக்கு ஓவியப் போட்டியில் பங்கேற்க வாய்ப்பளிப்பதன் மூலம், உங்களுக்குப் பிடித்தமான இடமான கடவுளின் சொந்த தேசம் என்றழைக்கப்படும் கேரளாவிற்கு, ஐந்து நாள் பயணத்தில் செல்ல இதோ ஒரு வாய்ப்பு.
சர்வதேச குழந்தைகள் ஓவியப் போட்டி 2023 அனைத்து வெற்றியாளர்களுக்கும் அற்புதமான பரிசுகளை வழங்குகிறது.
மேலும் அறிய
எப்படி பங்கேற்பது?
இந்த ஓவியப் போட்டியில் நான் எப்படி பங்கேற்க முடியும்? தகுதிக்கான அளவுகோல் என்ன? இந்த அனைத்து கேள்விகளுக்கும் பதில்களை இந்த வீடியோவில் காணலாம். இந்த டுடோரியல் வீடியோவைப் பாருங்கள், நீங்கள் எளிதாக இதில் பங்கேற்கலாம்.
கேரளாவின் கிராம வாழ்க்கை
இந்த சீசனில் போட்டியின் மையக்கரு கேரளாவின் கிராம வாழ்க்கை. கேரள கிராமங்களின் ரம்மிய வாழ்க்கைமுறைகள் உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ளது. கடவுளின் சொந்த தேசத்தின் கிராம வாழ்க்கையைப் பாருங்கள்.
கடந்த காலத்திலிருந்து சில துடிப்பான நினைவுகள்
எங்களை தொடர்பு கொள்ள
கூடுதல் தகவல்கள் அறிந்துகொள்ள, போட்டி ஒருங்கிணைப்பாளருக்கு contest@keralatourism.org என்ற மின்னஞ்சல் மூலம் அனுப்பவும், அல்லது +91 70129 93589 என்ற எண்ணிற்கு அழைக்கவும்..
அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை (IST) அழைக்கவும்.
போட்டி தொடர்பான அனைத்து தகவல் தொடர்புகளும் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும்.