கேரளாவில் ஜெட் ஸ்கை சவாரிகள் பெரும்பாலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த கடற்கரைகள், அமைதியான காயல்கள் ஆகியவற்றின் வழியாக மேற்கொள்ளப்படும் குறுகிய, வேகமான பயணங்களை உள்ளடக்கியதாகும். கோவளம், வர்க்கலா, செராய் போன்ற புகழ்பெற்ற கடற்கரைப் பகுதிகளைத் தவிர, தென்னந்தோப்புகளும் அலையாத்திக் காடுகளும் சூழ்ந்த கொச்சியின் கழிமுகப் பகுதிகளில் ஜெட் ஸ்கை மூலம் கடல் அல்லது காயல்களில் சிறிது நேரம் சவாரி செய்வதற்கான நல்ல வசதி கொண்ட மையங்களும் உள்ளன.


குறிப்புகள்

வசதி நிலைக்குப் பொருத்தமாகச் செயல்படுங்கள்

ஒரு வேளை நீங்கள் சற்றுப் பதற்றமாக உணர்ந்தால் அல்லது இது உங்களுக்கு முதல் அனுபவமாக இருந்தால், நீண்ட நேரம் தனியாக ஓட்டிச் செல்வதற்குப் பதிலாக வாகனத்தின் கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்ளுமாறு பயிற்றுநரிடம் நீங்கள் கேட்டுக்கொள்ளலாம்.

நிலைமைகளைப் பரிசோதிக்கவும்

கடல் ஒரு கணம் அமைதியாக இருக்கலாம், அடுத்த கணமே மிகவும் கொந்தளிப்பாக மாறலாம். அலைகள் உயரமாக இருந்தாலோ, பலத்த மழைப்பொழிவு இருந்தாலோ அல்லது பயணத்திற்குச் சுற்றுலா ஏற்பாட்டாளர் உங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை என்றாலோ நீங்கள் சவாரி செய்யும் ஆபத்தான செயலில் இறங்க வேண்டாம்.

பாதுகாப்பு முதன்மையானது

சரியாகப் பொருந்தக்கூடிய உயிர்க்காப்பு மேலங்கி அணிவதுடன், கைப்பிடிகளை உங்கள் கைகளால் இறுக்கப் பிடித்துக்கொண்டு பயிற்றுநரின் சமிக்கைகளைப் பின்பற்ற வேண்டும். பயிற்றுநரின் உதவியின்றி சாகசங்கள் மேற்கொள்ளவோ அல்லது திடீரெனத் திரும்பும் முயற்சிகளை மேற்கொள்ளவோ கூடாது.

உடைமைகளைப் பாதுகாக்கவும்

உங்கள் போன்கள், வாலட்கள், கேமராக்கள் ஆகியவற்றைக் கடற்கரையிலோ அல்லது ஒரு பெட்டகத்திலோ வைத்துவிட்டு வரவும். அவற்றின் மீது அதிகத் தண்ணீர் தெறித்துவிடலாம்; நீங்கள் கீழே விழவும் வாய்ப்புள்ளது.