கேரளாவில் கயாக்கிங், கனோயிங் (சிறுபடகோட்டம்) ஆகியவை நீங்கள் தண்ணீரில் எவ்வளவு தூரம் கடக்கிறீர்கள் என்பதை விட, தண்ணீரில் எப்படி நகர்கிறீர்கள் என்பதற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன. இந்த நிலையில், அனுபவத்தின் வேகம் குறைகிறது. கால்வாய்கள், ஆறுகள், அலையாத்திக் காடுகள், காயல்கள் ஆகியவை எந்தவித இடையூறும் இன்றி உங்களைச் சுற்றி அமைதியாகப் பரந்து விரிந்துள்ளன.


தண்ணீருக்கு அருகில் ஒரு சிறிய படகில், அன்றாட வாழ்க்கை தொடர்ந்துகொண்டிருக்கும் விளிம்புகள் வழியாக நீங்கள் செல்கிறீர்கள். கிராமத்தின் காட்சிகள், பறவைகள், மீன்பிடிச் செயல்பாடுகள் ஆகியவற்றை நீங்கள் இயற்கையாகக் காணும்போது, இந்தப் பயணம் இயக்கத்தைப் போலவே உற்றுநோக்கலுக்கும் முக்கியத்துவம் அளிப்பதாக அமைகின்றது.


தெற்கே கோவளம் மற்றும் வர்க்கலாவில் இருந்து தொடங்கி, கொல்லத்தின் அலையாத்திக் காடுகள், கொச்சி மற்றும் செராயைச் சுற்றியுள்ள காயல் பகுதிகள், கோழிக்கோடு, வயநாடு, காசர்கோடு ஆகிய இடங்களின் நதி அமைப்புகள் எனப் பல பகுதிகள் வழியாகச் செல்லும்போது, பல சிறிய பகுதிகளில் சான்றளிக்கப்பட்ட சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் வழிகாட்டப்பட்ட கயாக் மற்றும் கனோ (சிறுபடகுப்) பயணங்களை வழங்குகின்றனர். இந்த சுற்றுலா ஏற்பாட்டாளர்களில் பல பேர் பயணங்களை இணைக்கவும் செய்கின்றனர். சூரிய உதயம் அல்லது சூரியன் மறையும் நேரத்தில் குக்கிராமத்தில் நடைப்பயணம் மேற்கொள்ளுதல், பறவை பார்த்தலுக்காக ஆங்காங்கே நிறுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.


பொதுவாக, வெப்பநிலை அதிகச் சூடாக இல்லாமலும், தண்ணீர் அமைதியாகவும் இருக்கக்கூடிய அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்கள் உகந்த பருவம் ஆகும். இக் காலம் பெரும்பாலான ஆரம்பநிலையாளர்களுக்குப் பொருத்தமானதாக உள்ளது.


பிற மாதங்களின்போதும் சில வழிகள் செயல்படக்கூடியதாக இருக்கலாம், ஆனால் கன மழை அல்லது பலத்த காற்று காரணமாக நேரங்களை மாற்றித் திட்டமிட வேண்டியிருக்கலாம். பெரும்பாலான பயணங்கள் சிறிய, பயிற்சி பெற்ற குழுக்களால் மேற்கொள்ளப்படுகின்றன. அவர்கள் உயிர்க்காப்பு மேலங்கிகள், சில அடிப்படை அறிவுறுத்தல் ஆகியவற்றை வழங்குவதோடு, தங்கள் பயணப் பாதைகளை முன்கூட்டியே திட்டமிட்டு வைத்திருக்கின்றனர்.


குறிப்புகள்

உங்கள் நிலையைப் பொருத்தவும்

நீங்கள் முற்றிலும் புதியவர் என்றால் சிறிய, அமைதியான நீர்நிலைகளில் பயிற்சி செய்வது நல்லது. நதிகளில் நீண்ட பயணங்கள் அல்லது கடல் கயாக்கிங் ஆகியவற்றை நீங்கள் போதுமான திறன்களை வளர்த்துக்கொண்ட பிறகு மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்.

முன்கூட்டியே திட்டமிடவும்

வர்க்கலா, கோவளம், கொல்லம் போன்ற புகழ்பெற்ற இடங்களில் கயாக் அல்லது சிறுபடகுச் சவாரிக்கு நீங்கள் திட்டமிட்டிருந்தால், காலை மற்றும் மாலை நேர அமர்வுகள் விரைவில் நிரம்பிவிடும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். முன்கூட்டியே முன்பதிவு செய்துகொள்வதும், தொடங்கும் இடத்திற்கு எந்த நேரத்தில் வர வேண்டும் முந்தைய நாளில் உறுதிசெய்வதும் முக்கியமாகும்.

பாதுகாப்பு முதன்மையானது

செயல்பாடு முடிந்த பின்னரும் கூட உங்கள் உயிர்க்காப்பு மேலங்கியைத் தொடர்ந்து அணிந்திருக்கவும், வழிகாட்டியின் அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிக்கவும், நீங்கள் ஒரு கயாக் அல்லது சிறுபடகில் இருந்தால் எழுந்து நிற்பதையோ அல்லது திடீரென அங்குமிங்கும் நடமாடுவதையோ தவிர்க்கவும்.

குறைவாக எடுத்துச் செல்லவும்

தண்ணீர், சிறிதளவு சிற்றுண்டி, தொப்பி, சன்ஸ்கிரீன், நீர் புகாத உறையில் போன் போன்ற முக்கியமான சில பொருள்களை மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும், இவை அனைத்தையும் ஒரு சிறிய நீர் புகா உலர் பையில் வைத்துக்கொள்ளவும்.