தேக்கடியில் மூங்கில் தெப்பச் சவாரி மேற்கொள்வது என்பது கேரளாவில் நீங்கள் அனுபவிக்கக்கூடிய காலத்தால் அழியாத இயற்கை சாசகச் செயல்களில் ஒன்றாகும். ஏனெனில் இது வெறும் தெப்பச் சவாரி மட்டுமல்ல, மாறாக பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் மேற்கொள்ளப்படும் மலையேற்றத்தையும், மெதுவான தெப்பச் சவாரியையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான பயணத் திட்டம் ஆகும். வழக்கமாக, இப்பகுதியின் பசுமை மாறாத, ஈரப்பதமான இலையுதிர்க் காடுகள் வழியே குறுகிய, வழிகாட்டப்பட்ட நடைப்பயணத்துடன் அன்றைய நாள் தொடங்குகிறது. நதியைச் சென்றடைவதற்கு முன் நீங்கள் அமைதியாகச் சென்று இயற்கைக் காட்சிகளை ரசிக்கிறீர்கள். மலையேற்றத்துக்குப் பிறகு, அமைதியான ஏரி நீரின் மேற்பரப்பில் மூங்கில் தெப்பங்களில் மெதுவாகச் செல்லும் தெப்பச் சவாரி மேற்கொள்ளப்படுகிறது. அவ்வாறு செல்லும்போது வனப்பகுதியைக் காண்பதற்கும், விலங்குகளைத் தேடுவதற்கும், பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே கிடைக்கக்கூடிய அமைதியை உள்வாங்கிக்கொள்வதற்கும் உங்களுக்கு அவகாசம் கிடைக்கிறது.


விரைவுத் தகவல்

மொத்தக் கால அளவு

இந்தச் செயல்பாடு நாள் முழுவதும் மேற்கொள்ளக்கூடிய அனுபவமாக, பொதுவாக காலை 8:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை கிடைக்கிறது. குறுகிய தூர மலையேற்றமும், மூங்கில் தெப்பச் சவாரியையும் உள்ளடக்கிய அரை நாள் பயணத் திட்டமும் வழங்கப்படுகிறது, வழக்கமாக இது காலை நேரத்திலோ அல்லது பிற்பகல் நேரத்திலோ திட்டமிடப்படுகிறது.

கடினத்தன்மை நிலை

மிதமானது

பருவம்

அக்டோபர் முதல் மார்ச் வரை இந்த அனுபவம் சிறப்பானதாக இருக்கும்.

தோராயமான செலவு

எளிய உணவுகள் மற்றும் குடிநீர் உட்பட, மூங்கில் தெப்பச் சவாரிக்கும் மலையேற்றத்திற்கும் சேர்த்து நபர் ஒருவருக்குப் பொதுவாக 2,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நுழைவுக் கட்டணங்கள் வழக்கமாகத் தனியாக வசூலிக்கப்படுகின்றன, இந்தியப் பார்வையாளர்களுக்கு 25 ரூபாயும், வெளிநாட்டுப் பார்வையாளர்களுக்குக் கூடுதல் கட்டணங்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

எப்படிச் செல்வது

பேருந்து மூலம்: குமுளி, கோட்டயம் வழியாகவும், கேரளா மற்றும் தமிழ்நாட்டின் பிற முக்கிய நகரங்கள் வழியாகவும் தேக்கடி பேருந்து மூலமாக நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

விமானம் மூலம்: கொச்சி சர்வதேச விமான நிலையம் (தோராயமாக 145 கி.மீ. தொலைவு), தமிழ்நாட்டில் உள்ள மதுரை விமான நிலையம் (சுமார் 140 கி.மீ. தொலைவு) ஆகியவை அருகிலுள்ள விமான நிலையங்கள் ஆகும்.

இரயில் மூலம்: கோட்டயம், மதுரை இரயில் நிலையங்கள் அருகிலுள்ள முக்கிய இரயில் நிலையங்கள் ஆகும், அங்கிருந்து சாலை மார்க்கமாக தேக்கடிக்கு அல்லது குமுளிக்குச் செல்ல முடியும்.