வாகமனில் உள்ள பாராகிளைடிங் வசதியுடன் சேர்த்து, கண்ணூர் மாவட்டத்தில் பய்யாம்பலம் கடற்கரையில் பாராசெயிலிங் சேவையும் மாநிலத்தில் நன்கு நிறுவப்பட்ட சாகச மையங்களில் ஒன்றாக விளங்குகிறது. ஓர் அமைப்பின் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் குறுகிய, ஆற்றல் மிக்க பறத்தல் நிகழ்வுகளை மேற்கொள்ள நீளமான மணல் கடற்கரையும், திறந்த கடற்பகுதியும் முக்கியக் காரணிகளாக அமைகின்றன.


விரைவுத் தகவல்

குறிப்புகள்

பதிவுபெற்ற சுற்றுலா ஏற்பாட்டாளரைக் கண்டறியுங்கள், எப்பொழுதும் உபகரணத்தின் நிலைமையைப் பரிசோதியுங்கள்.

பிற்பகல் நேரத்தின் கடல் காற்று வழக்கமாக பறத்தல் செயலை மேற்கொள்ள உகந்ததாக உள்ளது; காலை நேரங்களில் அமைதியாகவும் மக்கள் கூட்டம் குறைவாகவும் இருக்கும்.

பாராசெயிலிங் தவிர, நீங்கள் கண்ணூர் நகரில் ஷாப்பிங் செய்யலாம், அருகிலுள்ள கடற்கரைகளையும் கோட்டைகளையும் பார்வையிடலாம்.

மொத்தக் கால அளவு

பறக்கும் நேரம்: சுமார் 3–5 நிமிடங்கள். மொத்தக் கால அளவு: அறிவுறுத்தல்கள் உட்பட 15-20 நிமிடங்கள்

கடினத்தன்மை நிலை

எளிதானது

பருவம்

நவம்பர் முதல் மார்ச் வரை; கடலில் நிலவும் வானிலை தீர்மானிக்கும் காரணியாக விளங்குகிறது.

தோராயமான செலவு

சுமார் 650 ரூபாய்

புகைப்படம் மற்றும் ஊடகங்கள்

பொதுவாக கடற்கரையில் இருந்தும், பக்கவாட்டில் உள்ள நோக்குநிலையில் இருந்தும் புகைப்படங்கள் / காணொளிகள் எடுக்க அனுமதிக்கப்படுகின்றது; சவாரியின் போது படம் பிடிக்க பாதுகாப்பு விதிமுறைகளைப் பொறுத்து அனுமதி வழங்கப்படுகின்றது.

என்னவெல்லாம் இடம்பெற்றுள்ளன

பாதுகாப்புப் பட்டை, உயிர்க்காப்பு மேலங்கி, அறிவுறுத்தல்கள், கண்காணிக்கப்படும் செயல்பாடு.

எப்படிச் செல்வது

பேருந்து மூலம், கண்ணூர் நகரத்திற்கு அருகில் உள்ளது; உள்ளூர் பேருந்துகளும், ஆட்டோக்களும் அடிக்கடி கிடைக்கின்றன.

விமானம் மூலம், கண்ணூர் சர்வதேச விமான நிலையம் (மட்டன்னூர்) சுமார் 30–35 கி.மீ. தொலைவில் உள்ளது.

இரயில் மூலம், கண்ணூர் இரயில் நிலையத்தில் இருந்து மிகக் குறைந்த தொலைவில் கடற்கரை அமைந்துள்ளது.