கோவளம் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள ஹவா கடற்கரை, ஆரம்பநிலையாளர்களுக்கு மிகவும் பொருத்தமான கடற்கரையோர ஸ்கூபா டைவிங் அனுபவத்தை வழங்குகிறது. இந்தச் சூழ்நிலை முக்குளிப்புக் கலையைப் படிப்படியாகவும் கட்டுப்பாட்டுடனும் அறிமுகப்படுத்திக்கொள்ள வழிவகுப்பதால், முதல் முறையாக இதில் ஈடுபடுபவர்களுக்கு இது விருப்பமான தெரிவாக அமைகிறது.


இங்கு ஆழ்கடல் ஆராய்ச்சியில் கவனம் செலுத்தப்படுவதில்லை, மாறாக நீருக்கடியில் சுவாசிப்பதையும் அடிப்படை இயக்கங்களையும் முக்குளிப்பாளர்களுக்கு உதவும் விதமாக குறைவான ஆழத்தில் மேற்கொள்ளப்படும் வழிகாட்டப்பட்ட முக்குளிப்புகளில் கவனம் செலுத்தப்படுகின்றது. கரையிலிருந்து உள்ளே செல்வது இந்த அனுபவத்தை எளிதாக அணுகக்கூடியதாக ஆக்குகிறது. மேலும், மேற்பார்வையின் கீழ் இச் சூழல்களை நிர்வகிப்பதும் பொதுவாக எளிதானதாக இருக்கும்.


இந்தப் பகுதியில் உள்ள கடற்படுகை பெரும்பாலும் மணற்பாங்கானதாகவும், ஆங்காங்கே பாறைத் திட்டுகளுடனும் காணப்படுகின்றது. கடல் அமைதியாக இருக்கும் சூழ்நிலைகளில் பார்வைத் தெளிவு ஒப்பீட்டளவில் நிலையானதாக இருப்பதால் நீருக்கடியில் நிலையான, நம்பிக்கையூட்டும் முதல் அனுபவத்தை இது வழங்குகிறது.


விரைவுத் தகவல்

அமைவிடம், போக்குவரத்து வசதிகள்

திருவனந்தபுரம் மாவட்டத்தில் கோவளம் கடற்கரைச் சாலையில் உள்ள ஹவா கடற்கரைக்கு அப்பால் பிரத்தியேகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கடலோரப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் முக்கியச் செயல்பாடு ஸ்கூபா டைவிங் ஆகும்.

தொலைவு

கோவளம் கடற்கரை: 01 கி.மீ.

திருவனந்தபுரம் நகரம்: 14 கி.மீ.

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம்: 15-17 கி.மீ.

திருவனந்தபுரம் மத்திய இரயில் நிலையம்: 14 கி.மீ.

வேலை நேரங்கள்

காலை முதல் பிற்பகலின் தொடக்கம் வரை (நண்பகலுக்கு முன் கடலில் வழக்கமாக அமைதியான சூழல் நிலவுகிறது)

மொத்தக் கால அளவு

30-45 நிமிடங்கள் (அறிவுறுத்தல்கள், முக்குளிப்பு நேரம் உட்பட)

முன்கூட்டியே முன்பதிவு செய்தல்

சுற்றுலாப் பருவங்களிலும் வார இறுதி நாட்களிலும் உங்கள் நேரப்பிரிவை முன்கூட்டியே முன்பதிவு செய்யுமாறு பரிந்துரைக்கப்படுகிறது.

வயது வரம்புகள்

வழக்கமாக 10 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர்

கடினத்தன்மை நிலை

எளிதானது

பருவம்

அக்டோபர் முதல் மார்ச் வரை

தோராயமான செலவு

ஒரு நபருக்கு 3,500 ரூபாய் முதல் 6,000 ரூபாய் வரை

கட்டுப்பாடுகள்

வானிலை, ஓதம், நீரின் தெளிவுத்தன்மை நிபந்தனைகள் பொருந்தும். நீங்கள் மது அருந்தியிருந்தாலோ அல்லது மருந்துகள் எடுத்திருந்தாலோ தண்ணீருக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

புகைப்படம் மற்றும் ஊடகங்கள்

நீங்கள் முக்குளித்த பிறகு பெரும்பாலும் எல்லாச் சுற்றுலா ஏற்பாட்டாளர்களும் உங்களுக்குத் தொழில்முறைப் புகைப்படங்கள் வழங்குகின்றனர். படங்களின் தெளிவு நீருக்கடியில் நிலவும் சூழ்நிலைகளைச் சார்ந்தது. கடற்கரையில் புகைப்படம் எடுக்க உங்கள் கேமராவைப் பயன்படுத்த எந்தக் கட்டுப்பாடுகளும் கிடையாது. இந்தக் கடற்கரைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் ட்ரோன்களைப் பயன்படுத்த முன் அனுமதி தேவை.

என்னவெல்லாம் இடம்பெற்றுள்ளன

அடிப்படை முக்குளிப்புக் கருவிகள், பாதுகாப்பு அறிவுறுத்தல்கள், ஆழமற்ற நீரில் வழிகாட்டப்பட்ட முக்குளிப்பு, மேற்பார்வை