கேரளக் கடற்கரையில் உள்ள பிற அலைச்சறுக்கு இடங்களை விட, காப்பில் மிகவும் அமைதியான, மக்கள் மிகவும் விரும்பக்கூடிய அலைச்சறுக்குத் தலமாக மாறியுள்ளது. இது கடலின் இயற்கை அழகை ஆராதிப்பவர்களை மட்டுமல்லாமல், நீண்ட நேரப் பயிற்சிகளையும் போதுமான தனிப்பட்ட இடவசதியையும் விரும்புகின்ற, படிப்படியாக முன்னேற்றம் அடைந்து வருகின்ற ஆரம்பநிலை அலைச்சறுக்கு வீரர்களையும் நிச்சயம் ஈர்க்கும். புவியியல் அமைப்பினால் கிடைத்துள்ள அமைதியான, கிட்டத்தட்ட இன்னிசை எழுப்பும் தன்மை கொண்ட சூழல் காப்பில் தலத்தின் தனித்துவமான அம்சங்களில் ஒன்றாகும். ஒருபுறம் காயல்கள் அமைதியாக, அடிவானத்தை நோக்கி நீண்டு கிடக்கின்றன; மறுபுறம் அரபிக்கடல் மென்மையான அலைகளுடன் கரையைத் தொட்டுச் செல்கின்றன. பல்வேறு நிலப்பரப்புகள் சங்கமிக்கும் இந்த இடம் கண்ணைக் கவரும் காட்சி அமைப்பை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல் ஒருவித அமைதியான சூழலையும் வழங்குவதனால், அலைச்சறுக்கு வீரர்கள் கவனச்சிதறல் இன்றி தங்கள் பயிற்சியில் கவனம் செலுத்த இது உதவுகிறது.
ஆரம்பநிலையாளர்கள் தங்கள் அலைச்சறுக்குப் பயணத்தைத் தொடங்க காப்பில் ஒரு மிகச்சிறந்த இடமாகும். முக்கியமாக, இங்கு கடல் அமைதியாகவும் அலைகள் சாந்தமாகவும் இருக்கும். அத்துடன், மிகவும் பிரபலமான மற்ற இடங்களுடன் ஒப்பிடுகையில் இந்தக் கடற்கரையில் கூட்டம் மிகக் குறைவாகவே காணப்படுகிறது. இந்தக் காரணங்களால், மக்கள் கூட்டம் மிகுந்த அல்லது கொந்தளிப்பான அலைகளைக் கொண்ட இடங்களை விட இயல்பாக அமைதியான சூழ்நிலையை விரும்பும் புதியவர்களுக்கு இது ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இங்கு, அலைச்சறுக்கு என்பது பொறுமை தேவைப்படுகின்ற / பொறுமை மட்டுமே தேவைப்படுகின்ற ஒரு விஷயமாக உள்ளது. அலைச்சறுக்கு தொடர்பான விவரங்களை, அதாவது எந்தவித அழுத்தமும் இன்றித் தடங்கலின்றித் தொடங்குதல், அலைச்சறுக்குப் பலகையை நீரில் குறிப்பிட்ட தூரம் வரை எடுத்துச்செல்லுதல், அலையில் சறுக்குச் செல்வதற்கு ஏற்ற சரியான தருணத்தைக் கண்டறிதல் ஆகியவற்றை நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள். உண்மையில் பாதுகாப்பான, ஊக்கம் நிறைந்த சூழலில் இந்த எளிய விஷயங்கள் கற்றல் செயல்முறையின் ஒரு பகுதியாக அமைகின்றன.
அலைச்சறுக்குத் தலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் வர்க்கலாவுக்கு வடக்கே உள்ள காப்பில் கடற்கரையில் அமைந்துள்ளது. கார் மூலம் நீங்கள் அங்கு எளிதில் செல்ல முடியும், வர்க்கலா நகரத்தில் இருந்தும் வரும் நபர்கள் இந்த வழியைப் பயன்படுத்துகின்றனர்.
வர்க்கலா நகரம்: 6–8 கி.மீ.
இடவை (எடவா): 3–5 கி.மீ.
கொல்லம் நகரம்: 30–35 கி.மீ.
திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம்: 50–55 கி.மீ.
அலைச்சறுக்கு பொதுவாக, அமைதியான அலைகளைக் கொண்ட நேரமாகிய காலை 6:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை மேற்கொள்ளப்படுகிறது.
ஓர் அமர்வுக்கு 45-90 நிமிடங்கள்
மக்கள் வருகை அதிகமுள்ள பருவகாலங்களில் அமர்வுகளுக்கான பதிவு விரைவில் முடிந்துவிடும் என்பதால் அமர்வுகளுக்கு முன்கூட்டியே முன்பதிவு செய்துகொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறது.
பொதுவாக 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, நிலவும் சூழலுக்கும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களுக்கும் உட்பட்டு பங்கேற்புக்கான அனுமதி வழங்கப்படுகிறது.
ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கும், இடைநிலையில் உள்ளவர்களுக்கும் ஏற்றது
கடல் அமைதியாகக் காணப்படும் காலமாகிய அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை கோவளம் கடற்கரைக்கு அலைச்சறுக்கு வீரர்கள் அதிக அளவில் வருகின்றனர்
ஓர் அமர்வுக்கு கட்டணம் 1,200 ரூபாய் முதல் 3,500 ரூபாய் வரை வேறுபடுகிறது.