கேரளக் கடற்கரையில் வர்க்கலா தனித்துவமாகத் திகழ்கிறது. இங்கு செம்மண் குன்றுகள் கடலுக்கு மேலே செங்குத்தாக உயர்ந்து நிற்கின்றன, இது மாநிலத்திலேயே பாறைக் குன்றுகளைப் பின்னணியாகக் கொண்ட வெகு சில கடற்கரைகளில் ஒன்றாகத் திகழ்கிறது. வர்க்கலா கடற்கரை மற்றும் அருகிலுள்ள பிளாக் சாண்ட் பீச் (கருப்பு மணல் கடற்கரை) போன்ற இடங்களில் கடற்கரையானது பொதுவாக மென்மையானது முதல் மிதமானது வரையிலான அலைகளைக் கொண்டதாக இருப்பதனால் இது ஆரம்பநிலை வீரர்களுக்கும், அதிக அனுபவம் வாய்ந்த அலைச்சறுக்கு வீரர்களுக்கும் ஏற்றதாக அமைக்கின்றது.
இங்கே அலைச்சறுக்கு ஒரு படிப்படியான முன்னேற்றத்தைப் பின்பற்றுகிறது. அமர்வுகள் பெரும்பாலும் கடற்கரையில் தொடங்குகின்றன. அங்கு இடுப்பு ஆழத் தண்ணீருக்குள் செல்வதற்கு முன் பயிற்றுநர்களின் வழிகாட்டுதலின் கீழ் அடிப்படை நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. பல பகுதிகளில் காணப்படுகின்ற மணற்பாங்கான கடற்படுகை மென்மையான, மிகவும் சமாளிக்கக்கூடிய இடைவெளிகளை உருவாக்க உதவுகிறது, இது கற்பவர்கள் சீராகத் தனது நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள உதவுகிறது.
காலை நேரத்தின் முற்பகுதி பொதுவாக அலைச்சறுக்கு செய்ய மிகவும் உகந்த நேரம் ஆகும். இந்த நேரம் தான் மிதமான காற்று வீசக்கூடிய, கடல் மிகவும் அமைதியாக இருக்கக்கூடிய நேரம் ஆகும். இந்த நேரத்தில் காணப்படும் நீண்ட, அமைதியான அலைகள் கடற்கரையோரம் மிகவும் சீரான பயண அனுபவத்தை அளிக்கின்றன.
திருவனந்தபுரத்தில் இருந்து 40-45 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள வர்க்கலா, வர்க்கலா கடற்கரை மற்றும் பிளாக் சாண்ட் பீச் (கருப்பு மணல் கடற்கரை) ஆகிய இடங்களில் அலைச்சறுக்கு அம்சங்களைக் கொண்டுள்ளது.
வர்க்கலா நகரம் / பாறைக் குன்று (கிளிஃப்): 0-2 கி.மீ.
வர்க்கலா சிவகிரி இரயில் நிலையம்: ~3 கி.மீ.
திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம்: ~40-45 கி.மீ.
திருவனந்தபுரம் நகரம்: ~45-50 கி.மீ.
அங்கு செல்வதற்கு பேருந்து, டாக்ஸி, ஆட்டோ சேவைகளும் கிடைக்கின்றன.
பொதுவான அலைச்சறுக்குப் பயிற்சி நேரங்கள்: முன்கூட்டியே தொடங்குவது சிறந்தது, வகுப்புகள் சாதாரணமாக காலை 6:00 மணி முதல் காலை 11:00 மணி வரையிலும், மாலை 3:30 முதல் மாலை 6:00 மணி வரையிலும் நடைபெறுகின்றன – வானிலை, அலைகள், நீங்கள் பதிவு செய்துள்ள அலைச்சறுக்குப் பள்ளி ஆகியவற்றைப் பொறுத்து இது மாறலாம். (பருவம், அலை, அலைச்சறுக்குப் பள்ளி ஆகியவற்றைப் பொறுத்தது)
தரைப் பயிற்சிக்கான அறிவுறுத்தல்கள் உட்பட 60-90 நிமிடங்கள்
40-60 நிமிடங்கள் (தோராயமாக, கடலின் நிலைமைகள், பயிற்சித் தொகுப்பு ஆகியவற்றைப் பொறுத்தது)
வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்கள், மக்கள் வருகை அதிகமுள்ள சுற்றுலா மாதங்கள் (டிசம்பர் – பிப்ரவரி) ஆகிய காலங்களில் முன்கூட்டியே முன்பதிவு செய்வது உகந்தது.
நீங்கள் பதிவு செய்கின்ற நிறுவனத்தைப் பொறுத்து 10 முதல் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் தண்ணீருக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். ஆயினும், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் வழிகாட்டுதல் அல்லது வழிநடத்துதலின் கீழ் அவர்கள் இதைச் செய்ய வேண்டும் என்பது கட்டாயமாகப் பின்பற்றப்படுகிறது.
எளிதானது முதல் மிதமானது வரை
அக்டோபர் முதல் ஏப்ரல் வரை. மிகவும் ஆபத்தான காலமாகிய ஜூன் முதல் செப்டம்பர் வரை நிலவும் வானிலை நிலைமைகளும் கொந்தளிப்பான கடலும் அலைச்சறுக்கு செய்ய உகந்ததாக இருப்பதில்லை.
ஆரம்பநிலையாளர் : அலைச்சறுக்கை முயற்சிப்பவர் / ஒரு நாள் பயிற்சி: ஒரு நபருக்கு ₹1,500-₹3,000 | பல நாட்கள் பயிற்சி / அலைச்சறுக்கு முகாம்: ஒரு நபருக்கு ₹6,000-₹15,000+ (கால அளவு, இடம்பெற்றுள்ள பயிற்சிகள் ஆகியவற்றைப் பொறுத்தது) | அனுபவமிக்க அலைச்சறுக்கு வீரர்களுக்கான வழிகாட்டப்பட்ட அமர்வுகள்: கால அளவு, உபகரணத்தின் பயன்பாடு ஆகியவற்றைப் பொறுத்து கட்டணம் மாறுபடுகிறது (உண்மையான கட்டணங்கள் அலைச்சறுக்குப் பள்ளி, பருவம், குழுவின் அளவு ஆகியவற்றைப் பொறுத்ததாகும்.)
அலைச்சறுக்கில் ஈடுபடுவதற்கு முன் மது அருந்துவது அல்லது வேறு ஏதேனும் வடிவிலான போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது அனுமதிக்கப்படுவதில்லை. காயம் ஏற்படுத்தக்கூடிய கூர்மையான அல்லது தளர்வான நகைகளை அணியக்கூடாது. கடறரையிலோ அல்லது தண்ணீரிலோ குப்பைகளைப் போட உங்களுக்கு அனுமதி இல்லை.
கடற்கரை ஒழுங்குமுறை மற்றும் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் உள்ள முக்கியக் கடற்கரையிலும், பாறைக் குன்றுகளைக் கொண்ட பகுதிகளிலும் ட்ரோன் பயன்படுத்துவதற்கு முன் அனுமதி வாங்க வேண்டியிருக்கலாம். ட்ரோன் பயன்படுத்துவதற்கு முன் எப்பொழுதும் உள்ளூர் வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்கவும்.
உங்கள் உயரத்துக்கும் எடைக்கும் ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட மென்மையான மேற்பரப்பு கொண்ட அலைச்சறுக்குப் பலகை
ராஷ் வெஸ்ட் அல்லது வெட்சூட் (வானிலையைப் பொறுத்து)
தகுதிபெற்ற அலைச்சறுக்குப் பயிற்றுநர் (1 சிறு குழுவுக்கு ஒரு பயிற்றுநர்)
கடற்கரைப் பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் மற்றும் நிலப்பகுதி தொழில்நுட்பப் பயிற்சி
தண்ணீருக்குள் இறங்க உதவி மற்றும் பயிற்றுநர்களின் மேற்பார்வையின் கீழ் பயிற்சி