கோழிக்கோடு (ஃபெரோக்), கேரளாவின் புதிய அலைச்சறுக்குத் தலமாக ஆகியுள்ளது. இது நீண்ட மணற்பாங்கான கடற்கரைகள், சீரான அலைகள், ஒப்பீட்டளவில் அமைதியான கடற்கரை ஆகியவற்றுக்குப் பெயர்பெற்றது. இங்குள்ள கடற்கரை ஆரம்பநிலையாளர்கள் பாதுகாப்பான சூழலில் அலைச்சறுக்கு கற்றுக்கொள்ள ஓர் உகந்த இடமாக விளங்குகின்ற அதே நேரத்தில், நடுத்தர நிலை அலைச்சறுக்கு வீரர்கள் மக்கள் வருகை அதிகமுள்ள பருவத்தின்போது வழக்கமான அலைகளில் பயிற்சி செய்ய முடியும். பிற புகழ்பெற்ற கடற்கரைகளுடன் ஒப்பிடுபோது குறைந்த எண்ணிக்கையிலான நபர்களே வருவதால், ஃபெரோக் இயற்கையோடு மிகவும் இயைந்த அமைதியான, ஒருமுனைப்படுத்தப்பட்ட அலைச்சறுக்கு அனுபவத்தைக் கொடுக்கிறது.
இங்குள்ள கடற்கரைப் பகுதி நதியின் முகத்துவாரங்களில் இருந்து வருகின்ற நீரோட்டங்களாலும் திறந்த கடலில் இருந்து வரும் அலைகளாலும் இயக்கப்படுகிறது. இதன் விளைவாக ஏற்படும் சிறிய அலைகள் பயிற்சி அமர்வுகளுக்கும், பொழுதுபோக்கு அலைச்சறுக்குக்கும் மிகவும் பொருத்தமானதாக உள்ளன. இந்தக் காரணத்தினால், ஃபெரோக் வட கேரளா பகுதியில் உள்ளூர் அலைச்சறுக்கு சமூகமாகவும், இளைஞர்களால் முன்னெடுக்கப்படும் அலைச்சறுக்குச் செயல்பாட்டு மையமாகவும் மாறி வருகின்றது.
கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ஃபெரோக் கடற்கரையோரத்தில் உள்ள சாளியாறு நதியின் முகத்துவாரத்துக்கு அருகில் அலைச்சறுக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஃபெரோக் நகரம்: 23 கி.மீ.
கோழிக்கோடு நகரம்: 11–13 கி.மீ.
கோழிக்கோடு சர்வதேச விமான நிலையம் (கரிப்பூர்): 25-28 கி.மீ.
கோழிக்கோடு இரயில் நிலையம்: 12–14 கி.மீ.
சாதாரணப் பேருந்து சேவைகள், டாக்சிகள், ஆட்டோ ரிக்ஷாக்கள் ஆகியவற்றின் மூலம் கோழிக்கோடு நகரத்தில் இருந்து ஃபெரோக் செல்ல முடியும்.
வழக்கமான நேரங்கள்: முற்பகல் 6:00 மணி – முற்பகல் 10:00 மணி மற்றும் பிற்பகல் 3:30 மணி – பிற்பகல் 6:30 மணி (கடல் மற்றும் அலை நிலைமைகளைப் பொறுத்தது)
அலைச்சறுக்குக்கான அறிவுறுத்தல்கள் உட்பட 60-90 நிமிடங்கள் அலைச்சறுக்கு நேரம்: ஓர் அமர்வுக்கு 30-45 நிமிடங்கள்
வார இறுதி நாட்களிலும் மக்கள் வருகை அதிகமுள்ள பருவங்களிலும் உங்கள் நேரப்பிரிவில் கூட்டம் அதிகமாகலாம் என்பதால், உங்கள் நேரப்பிரிவை முன்கூட்டியே முன்பதிவு செய்துகொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறது.
பெரும்பாலான நிகழ்வுகளில் 10 வருடங்கள் மற்றும் அதற்கு மேல்
ஆரம்பநிலையாளர்கள் முதல் இடைநிலை அலைச்சறுக்காளர்கள் வரை
அக்டோபர் முதல் ஏப்ரல் வரை. கடல் கொந்தளிப்பாக இருப்பதால் பருவமழைக் காலங்கள் (ஜூன் – செப்டம்பர்) பொருத்தமானவை அல்ல.
பயிற்சி நிலை, உபகரணங்கள் ஆகியவற்றைப் பொறுத்து ஓர் அமர்வுக்கு 1,500 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை.
மது அருந்துதல், போதைப்பொருள் பயன்படுத்துதல், குப்பை போடுதல், கூர்மையான பொருள்களை வைத்திருத்தல்.
உயர் ஓதங்களின்போதும், உள்ளூர் அதிகாரிகளால் கடல் கொந்தளிப்புக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும்போதும் அலைச்சறுக்கு வரையறுக்கப்பட்டுள்ளது.
பொதுவாக, கடற்கரையில் இருந்து புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
விருப்பப்பட்டால், பயிற்றுநர்கள் அல்லது உதவி ஊழியர்கள் பங்கேற்பாளர்களின் செயல்களைப் புகைப்படங்கள் அல்லது குறுங் காணொளிகள் எடுக்கலாம்.
கடற்கரையில் ட்ரோன்கள் பயன்படுத்துவது வரையறுக்கப்பட்டுள்ளது என்பதால், உள்ளூர் அதிகாரிகளிடம் இருந்து அதற்கான அனுமதி பெற வேண்டும்.
அலைச்சறுக்குப் பலகை மற்றும் பாதுகாப்புக் கயிறு
அடிப்படைப் பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் மற்றும் அலைச்சறுக்கு அறிவுறுத்தல்
அமர்வின்போது பயிற்றுநர் ஆதரவு
உயிர்க்காப்பு மேலங்கி (ஆரம்பநிலையாளர்களுக்கு, தேவைப்பட்டால்)