திறந்தநிலைக் கடல், பருவ காலத்தில் சீராக எழும் அலைகள், நீண்ட கடற்கரை போன்ற சிறப்பம்சங்களைக் கொண்ட நார்த் கிளிஃப் (வடக்குப் பாறைக்குன்று), வர்க்கலாவின் மிகப் பொருத்தமான அலைச்சறுக்குப் பகுதியாகத் திகழ்கிறது. இது, குறுகிய வட்டத்துக்குள் அடைபட்டது போன்ற உணர்வு இல்லாமல் கற்றுக்கொள்வதற்கான பரந்த வெளியை உங்களுக்கு அளிக்கிறது. வழக்கமாக இங்கு, ராட்சத அலைகளில் சாகசம் செய்யும் தீவிரமான முறைக்கு மாறாக கட்டுப்பாடான கற்றல் மூலம் சீரான அலைச்சறுக்கு நடைமுறை பின்பற்றப்படுகிறது. கடற்கரைச் சூழலும் ஆதரவாகச் செயல்படுகிறது: இங்கு நிலையான தொடுவானம், குறிப்பிட்ட மாதங்களில் கணிக்கக்கூடிய வகையிலான அலைகள், ஆரம்பநிலையாளர்களை வசதியாக உணரவைக்கும் அதே நேரம் இடைநிலைக் கட்டத்தில் இருக்கும் வீரர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்திக்கொள்ளப் போதுமான அளவு அலைச்சறுக்கில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு வழங்கும் சூழல் ஆகியவை நிலவுகின்றன.


விரைவுத் தகவல்

அமைவிடம், போக்குவரத்து வசதிகள்

அலைச்சறுக்குச் செயல்பாடுகள் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள வர்க்கலாவின் நார்த் கிளிஃப் (வடக்குப் பாறைக் குன்றுப்) பகுதிக்கு அருகே உள்ள கடற்கரையில் நிகழ்த்தப்படுகின்றன. வர்க்கலா நகரத்தில் இருந்தும், அருகில் உள்ள தங்குமிடப் பகுதிகளில் இருந்தும் சாலை மார்க்கமாக இந்த இடத்தை எளிதில் சென்றடையலாம்.

தொலைவு

வர்க்கலா நகரம்: 2-5 கி.மீ.

கொல்லம் நகரம்: 35-45 கி.மீ.

திருவனந்தபுரம் நகரம்: 40-55 கி.மீ.

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம்: 45-60 கி.மீ.

வேலை நேரங்கள்

அலைச்சறுக்கு அமர்வுகள் பொதுவாக காலை 6:30 மணிக்கும் மாலை 6:00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் திட்டமிடப்படுகின்றன. அதிலும், வழக்கமாக காற்று மிதமாக வீசுகின்ற, கடல் மிகவும் நிலையாக இருக்கின்ற காலை நேரத்தின் முற்பகுதியிலும், மாலை நேரங்களிலும் அலையின் நிலைமைகள் மிகவும் உகந்ததாக உள்ளன.

மொத்தக் கால அளவு

ஓர் அமர்வுக்கு 45-90 நிமிடங்கள்

முன்கூட்டியே முன்பதிவு செய்தல்

மக்கள் வருகை அதிகமுள்ள பருவத்திலும், வார இறுதி நாட்களிலும் முன்கூட்டியே முன்பதிவு செய்வது உகந்தது

வயது வரம்புகள்

10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இந்தச் செயல்பாடுகளில் பங்கேற்பது பொதுவாகப் பரிந்துரைக்கப்படுவதில்லை. கடலின் நிலைமைகள் எந்த நேரத்திலும் மாறலாம் என்பதால் குழந்தையால் அதற்கேற்பத் தன்னை மாற்றிக்கொள்ள முடியாமல் போகலாம். சாதாரணமாக 10 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இது பொருத்தமானதாக இருக்கும் (கடலின் நிலைமையைப் பொறுத்தது)

கடினத்தன்மை நிலை

ஆரம்பநிலையாளர்கள் முதல் இடைநிலை அலைச்சறுக்காளர்கள் வரை

பருவம்

கேரளக் கடற்கரைகளில் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலம் அலைச்சறுக்கில் ஈடுபட உகந்த காலம் ஆகும்.

தோராயமான செலவு

ஓர் அமர்வுக்கு 1,200 ரூபாய் முதல் 3,500 ரூபாய் வரை