ஒடுக்கப்பட்ட மக்களின் சுயமரியாதையின் ஓர் அடையாளமாக சிவபெருமான் விளங்குவதாக குரு கருதினார். சைவச் சிந்தனையாளர்கள் வரலாற்றின் தர்க்கத்தை ஆராய்வதில் ஆர்வம் கொண்டவர்களாகவும், சாதி மற்றும் சமயச் சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டவர்களாகவும் உள்ளனர். முரண்பாடுகளைக் களைய முயன்ற குரு, சிவ பிரதிஷ்டையின் மீது நாட்டம் காட்டியதற்கு இதுவே காரணம் ஆகும். மதுபானமும் விலங்கு பலியும் வழிபாட்டு முறைகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஒரு சமூகத்தை மேம்படுத்த வேண்டும் என்ற தேவையே இதற்கு உந்துதலாக அமைந்தது. மனிதர்கள் சமத்துவமாக வாழக்கூடிய ஒரு முன்மாதிரியான இடத்தை குரு நிறுவிக்கொண்டிருந்தார். அருவிப்புரம் எப்படிப்பட்ட வழிபாட்டுத் தலமாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார் என்பதைத் தெரிவிக்க அவர் பின்வரும் கவிதையை இயற்றினார்.

“ஜாதி பேதம் சமயத்துவேஷம்
ஏதுமில்லாதேசர்வரும்
சோதரத்வெனவழுன்னா
மாத்ருகஸ்தனமாநிது”

(இது சாதிப் பாகுபாடு அல்லது சமய வெறுப்பு இல்லாமல் அனைவரும் சகோதர மனப்பான்மையுடன் வாழும் ஒரு முன்மாதிரி இடமாகும்).

குரு இந்த உலகத்தை அத்தகைய ஒரு முன்மாதிரியான இடமாக மாற்றுவதற்கு அரும்பாடுபட்டார். அருவிப்புரம் பிரதிஷ்டை மூலம், கோயிலுக்குள் நுழைய உயர்சாதியினரால் அனுமதி மறுக்கப்பட்ட ஒரு சமூகத்தின் ஆன்மிக வலிமையை குரு மீட்டெடுத்தார். தனிநபர்களின் உடல் மற்றும் மனத் தூய்மை, சமூகத்தின் கல்வி மேம்பாடு, ஒற்றுமை ஆகியவற்றை ஆதரிக்கும் செயல்பாடுகளை மையமாகக் கொண்டு நிறுவனமாகக் கோயில் விளங்குவதாக குரு கருதினார். அதனால் தான் குரு பழமையான கோயில் கருத்துகளைப் பற்றிக் கேள்வி எழுப்பினார். தனது கருத்துகளுக்கு வலுச் சேர்க்கும் விதமாக, சொற்பொழிவு மண்டபம், பள்ளி, தொழிற்பயிற்சி மையம், நூலகம் ஆகிய அனைத்தும் கோயிலுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று குரு விரும்பினார். 1917-இல், கோயில் கட்டுவதை ஊக்குவிக்க வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார். அதற்குப் பதிலாகக் கல்வி நிறுவனங்களைக் கட்டுமாறு வலியுறுத்தினார். 

வாக்பதானந்தருடனான உரையாடலின்போது, சிலைகள் ஏன் நிறுவப்படுகின்றன என்று கேட்கப்பட்டபோது குரு இவ்வாறு பதிலளித்தார், “அது நமக்காக அல்ல, அப்படித்தானே?” ஸ்ரீ நாராயண குருவின் வாழ்க்கையில் செயல்பாட்டுக் காலம் என்பது அருவிப்புரம் பிரதிஷ்டையில் இருந்து தொடங்கியது. வரலாற்றை மாற்றியமைத்த இந்த நிகழ்வின் மூலம், அவர் கேரள மறுமலர்ச்சியின் உந்துசக்தியாக மாறினார். 

மற்ற தலைப்புகள்