Trade Media
     

ஃபோர்ட் கொச்சி


ஃபோர்ட் கொச்சியின்  வரலாறு பற்றி ஆராய்ந்து பார்த்தால் வேறு எந்த இடமும் அதன் காலடியில் நிற்க முடியாது. அமைதியாக ஓய்வெடுத்து நன்றாக மூச்சை இழுத்து விடுங்கள். பருத்தி ஆடை, மென்மையான ஆடை ஆகியவற்றோடு ஒரு வைக்கோல் தொப்பியையும் அணிந்து கொண்டு வெளியே வாருங்கள். இந்தத் தீவின் ஒவ்வொரு மூலையும் ஒரு வரலாற்றை கொண்டிருக்கும். அவை உங்களை வியப்பில் ஆழ்த்துவதாக  இருக்கும். இந்த இடம்தான் கடந்தகால ஊழியரின் மாதிரிகளைத் தக்கவைத்துக் கொண்டு இன்று அவற்றின் பெருமைகளை எடுத்துச் சொல்லி தனக்கென ஒரு உலகத்தைக் கொண்டு நிற்கிறது. இந்த இடத்தின் தெருக்களில் நடந்து செல்லும் போது நீங்கள் கடந்த கால வரலாற்றுச் சுவடுகளைக் கண்டு இன்புறலாம். யாராலும் உங்களை தடுத்துவிட முடியாது.

அங்கிருந்து K. J. மார்ஷல் ரோடு வழியாக நேரே நடந்து சென்று இடப்பக்கமாக திரும்பினால் நீங்கள் இம்மானுவேல் கோட்டையின் காட்சிகளைக் காணலாம். இந்தக் கோட்டை முன்பு போர்த்துக்கீசியர்க்ளுக்குச் சொந்தமாக இருந்தது. இது கொச்சியின் மகாராஜாவிற்கும் போர்ச்சுக்கல் ஏகாதிபத்தியத்திற்கும் இடையிலான அரசியல் கூட்டுவின் அடையாளமாக உள்ளது. அவர்களாலேயே இந்த ஃபோர்ட்  இந்தப் பெயரைப் பெற்றது. இந்தக் கோட்டை 1503ல் கட்டப்பட்டு 1538-இல் மீண்டும் மறுசீரமைக்கப்பட்டது. இங்கிருந்து சிறிது தூரம் நடந்து சென்றால் நீங்கள் டச்சுக்காரர்களில் கல்லறைகளைக் காணலாம். 1724ல் அர்ப்பணம் செய்யப்பட்ட இந்தக் கல்லறைகள் தென்னிந்திய திருச்சபையால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள கல்லறையிலுள்ள கற்கள் தங்கள் குடியேற்றங்களை விரிவுபடுத்துவதற்காக தங்கள் தாய் மண்ணைவிட்டு இங்கு வந்தவர்களைப் பற்றி இங்குவரும் சுற்றுலாப் பயணிகளுக்கு நினைவுபடுத்தி வருகிறது.

அடுத்து நாம் பார்க்க வேண்டிய இடம் பழைமை வாய்ந்த தாக்கூர் ஹவுஸ். இதன் கான்கிரீட் மாதிரிகள் காலனி ஆட்சியை நினைவுபடுத்துவதாக உள்ளன. எளிய அழகிய கட்டடத்திற்கு இது சான்றாக உள்ளது. குணால் அல்லது மலை பங்களா என்று அழைக்கப்பட்ட இந்த இடம் பிரிட்டீஷ் ஆட்சியில் தேசிய வங்கியின் மேலாளர்களின் வீடாக இருந்தது. தற்போது இது தாக்கூர் மற்றும் குழுமத்திற்கு சொந்தமாக உள்ளது. இது தேயிலை வர்த்தக சங்கமாக மாறியுள்ளது.

அங்கிருந்து நடந்து சென்றால், மற்றுமொரு வரலாற்று கட்டிடமான டேவிட் அரங்கம் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கும். இது 1695ல் டச்சு கிழக்கிந்திய கம்பெனியால் கட்டப்பட்டது. இந்த ஹென்டிரிக் அட்ரியன் வான் ரீட் டாட் டிரகெஸ்டனோடு தொடர்புடையது. புகழ்பெற்ற டச்சு கமாண்டரான இவர் கேரள விலங்குகளைப்பற்றிய புத்தகமான ஹார்ட்டஸ் மலபாரிக்கஸ்-ஐ வெகுவாகப் புகழ்ந்துள்ளார். எனவே அந்த அரங்கமானது டேவிட் கோடருடைய பெயரால் அழைக்கப்படுகிறது.

அணிவகுப்பு மைதானம் (பரேட் கிரவுண்ட்) என்ற போர்த்துக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் இராணுவ அணி வகுப்பு நடத்திய இடத்தில் நடந்து சென்று கடப்போமானால், இந்தியாவின் மிகப்பழமையான ஐரோப்பிய தேவாலயமான புனித பிரான்சிஸ் தேவாலயத்தைச் சென்றடையலாம். 1503-ல் கட்டப்பட்டதிலிருந்து பல கட்டங்களைக் கடந்து தற்போதுள்ள நிலையை அடைந்துள்ளது. தற்போது இந்த தேவாலயம் தென்னிந்திய திருச்சபையின் கீழ் செயல்பட்டு வருகிறது. வாஸ்கோடகாமா புதைக்கப்பட்ட கல்லறையின் கல்லை இன்றும் நீங்கள் இங்கு காணலாம்.

தேவாலய சாலை நடந்து செல்வதற்கு அருமையான இடமாகும். அந்த சாலை வழியாக நடந்து சென்றால், அரபிக் கடலிலிருந்து வீசும் குளிர்ந்த காற்று உங்கள் உடலைத் தாலாட்டும். அங்கிருந்து சற்று கீழே நடந்து கடலோரம் வருவோமானால், ஒரு அருமையான நூலகம் மற்றும் விளையாட்டு கோப்பைகளின் தொகுப்புகளும் உள்ள கொச்சின் கிளப்பைக் காணலாம். அழகான இயற்கைக் காட்சிகள் நிறைந்த இந்தப் பூங்கா பிரிட்டீஷாரின் ஆட்சியை இன்றும் மனக்கண் முன் கொண்டு நிலை நிறுத்துவதாக உள்ளது.

தேவாலய ரோட்டிற்கு மறுபடியுமாக திரும்பிச் சென்றால், இடது பக்கத்தில் பாஸ்டைன் பங்களா என்னும் கம்பீரமான கட்டடம் ஒன்று நம் கண்முன் காட்சி தரும். இந்த இந்தோ – ஐரோப்பியன் ஸ்டைலில் கட்டப்பட்ட விந்தையான கட்டடம் 1667-இல் கட்டப்பட்டது. இது பழைய டச்சு கோட்டையான ஸ்டிராம் பெர்க் பாஸ்டைன் என்ற இடத்தில் இது இருப்பதால் அப்பெயர் பெற்றது. இப்போது இது துணை ஆட்சியாளரின் வீடாக உள்ளது.

வாஸ்கோடகாமா சதுக்கம் இதன் அருகில் அமைந்துள்ளது. குறுகலாக அமைந்துள்ள இந்த பொழுதுபோக்கு இடம் சற்று இளைப்பாற ஏற்ற இடமாக உள்ளது. அங்குள்ள கடைகள் யாவற்றிலும் சுவையான கடல் உணவுகள் மற்றும் இளநீர்கள் என்று பார்த்ததுமே நம்மை உண்ணத்தூண்டுபவையாக இருக்கும். கொஞ்சம் சுவைத்துவிட்டு உங்கள் கண்களுக்கு விருந்தளிக்கும் சைனிஸ் மீன்பிடி வலை பக்கம் திருப்பினால் அது உங்கள் புருவத்தை உயர்த்த வைக்கும். இந்த வலைகள் கி.பி. 1350 – 1450ல் குப்லாய்கான் அரசவை வணிகர்களால் அமைக்கப்பட்டது ஆகும்.

சற்று இளைப்பாறிவிட்டு நீங்கள் இப்போது பயஸ் லெஸ்லி பங்களாவிற்குச் செல்லலாம். இந்த அழகிய கட்டடம் முன்னர் கிழக்கிந்திய கம்பெனியான பயஸ் லெஸ்லி & கோ காப்பி வியாபாரிகளுடையதாக இருந்தது. இந்த கட்டடத்தில் போர்ச்சுக்கீசியர், டச்சுக்காரர் மற்றும் உள்ளூர் கட்டடக்கலையின் தாக்கம் தெரியும். வாட்டர் பிராண்ட், முன்கூடங்களின் அமைப்பு இதன் அழகை மிகைப்படுத்துவனவாக உள்ளன. அங்கிருந்து கிழக்கு நோக்கி திரும்பினால் நாம் பழைய ஹார்பர் ஹவுஸ்-க்கு சென்றடையலாம். இது காரியட்மோரன் & கோ என்னும் புகழ்பெற்ற தேயிலை புரோக்கர்களால் 1808-இல் கட்டப்பட்டது. அதன் அருகில் உள்ள கொச்சின் மின்சார குழுமம் இருக்கும் கட்டடம் 1808-இல் சாமுவேல் S. கோடரால் கட்டப்பட்டதாகும். இந்த கட்டட அமைப்பு குடியேற்ற கால அமைப்பு மற்றும் இந்தோ-ஐரோப்பிய கட்டட கலையின் கலவையை தெரிவிப்பதாக உள்ளது  

அங்கிருந்து மேலும் வலதுபுறம் செல்வோமானால் நாம் பிரின்சஸ் தெருவைச் சென்றடையலாம். இங்கு மனதைக் கொள்ளை கொள்ளும் அழகிய பூக்களைக் கடைகளில் காணலாம். இந்தப் பகுதியிலுள்ள மிகப் பழமையான தெருவாக இது இருப்பதால் சாலையின் இருபக்கங்களிலும் ஐரோப்பிய ஸ்டைல் குடியிருப்புகளைக் காணலாம். இங்கு அமைந்துள்ள லோஃபர் கார்னர் உல்லாசத்தையும், மகிழ்ச்சியையும் விரும்புகிறவர்களுக்கு ஒரு நல்ல பாரம்பரிய ஹேங்கவுட் -ஆக உள்ளது.

லோஃபர் கார்னரிலிருந்து வடக்கு நோக்கி சென்றால், நீங்கள் போர்த்துக்கீசியர்களால் கட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க சாந்தகுரூஸ் தேவாலயத்தைக் காணலாம். இது 4-ஆம் போப் பாலால் 1558-இல் தேவாலயமாக அபிஷேகிக்கப்பட்டது. 1984-இல் போப் பாண்டவர் இரண்டாம் ஜான்பால் இதனை பாசிலிகாவாக அறிவித்தார். அதனைப் பார்த்த பின்னர் நீங்கள் 1808-இல் கட்டப்பட்ட ஒரு பரம்பரை பங்களாவாக இருந்து தற்போது உயர்நிலைப்பள்ளியாக செயல்படும் இடத்தைப் பார்க்கலாம். அங்கிருந்து மேலும் நடந்து திரும்பவும் பிரின்சஸ் தெரு மற்றும் ரோஸ் தெருவிற்குச் சென்றடையலாம். அங்கு வாஸ்கோடகாமா வசித்ததாக கூறப்படும் வாஸ்கோ ஹவுஸ்-சை நீங்கள் காணலாம். இந்த பாரம்பரிய மற்றும் அடையாளச் சின்னமாக உள்ள ஐரோப்பிய வீடு கொச்சியிலுள்ள பழைமையான போர்த்துக்கீசிய குடியிருப்புகளுள் ஒன்றாக உள்ளது.

அங்கிருந்து இடப்பக்கமாகத் திரும்பி ரிட்ஸ்டாலே ரோடு நோக்கிச் சென்றால் பராடே கிரவுண்ட்டை நோக்கி இருக்கும் பெரிய மரக் கேட்டான VOC கேட்டைக் காணலாம். 1740-இல் கட்டப்பட்ட இந்த கேட் டச்சு  கிழக்கிந்திய கம்பெனியின் மோனோகிராமை (VOC) பெயராகக் கொண்டுள்ளது. அதன் அருகில் கொச்சியில் உள்ள பிரிட்டீஷ் கிளப் அங்குள்ள நான்கு கிளப்களிலும் மிகச் சிறந்த யுனெட்டட் கிளப்பாக உள்ளது. இப்போது அது பக்கத்திலுள்ள புனித பிரான்சிஸ் தொடக்கப்பள்ளியின் வகுப்பறையாக செயல்பட்டு வருகிறது.

இங்கிருந்து நேரே நடந்து சென்றால், அந்த ரோட்டின் முடிவில் உள்ள பிஷப் ஹவுஸ்-ஐ நீங்கள் சென்றடையலாம். இது 1506ல் கட்டப்பட்டதாகும். இது முன்பு போர்த்துக்கீசிய ஆளுநரின் வீடாக இருந்தது. இது பராடே கிரவுண்ட் அருகிலுள்ள சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. இந்த வீட்டின் முகப்புப்பகுதி ஐரோப்பிய கலைநயமிக்க பெரிய வளைவுகளைக் கொண்டதாக உள்ளது. இந்தக் கட்டடம் டாம் ஜோஸ் கோமரிய ஃபெரிரா என்னும் கொச்சி டயோசிசனின் 27-வது பிஷப்பிற்குச் சொந்தமானதாகும். இவர் இந்தியாவிலிருந்து பர்மா, மலேசியா மற்றும் சிலோன் போன்ற நாடுளுக்கு நாடு கடத்தப்பட்டார்.

இப்போது நாம் நமது பயணத்தை முடித்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது. கடந்த நாட்களின் மறக்கமுடியாத நினைவுகளை மனதில் அசைபோட்டபடி, கண்கள் நிறைய கண்ட காட்சிகளை நிலைநிறுத்திக் கொண்டு, மறுபடியுமாக இப்படியொரு காட்சியைக் காண வேண்டும் என்று நீங்கள் விழைவதில் தப்பே இல்லை. நீங்கள் அப்படி  எண்ணினால் வாருங்கள் இன்னும் செல்லுவோம்.


 
 
Photos
Photos
information
Souvenirs
 
     
Department of Tourism, Government of Kerala,
Park View, Thiruvananthapuram, Kerala, India - 695 033
Phone: +91-471-2321132 Fax: +91-471-2322279.

Tourist Information toll free No:1-800-425-4747
Tourist Alert Service No:9846300100
Email: info@keralatourism.org, deptour@keralatourism.org

All rights reserved © Kerala Tourism 1998. Copyright Terms of Use
Designed by Stark Communications, Hari & Das Design.
Developed & Maintained by Invis Multimedia