சமாதி மந்திரத்தின் வான்வழி காட்சி

ஸ்ரீ நாராயண குரு 1904-ஆம் ஆண்டில் தனது தலைமையகத்தை அருவிப்புரத்தில் இருந்து சிவகிரிக்கு மாற்றினார். அவரது பிற்காலச் செயல்பாடுகள் அனைத்தும் சிவகிரியை புனித யாத்திரைத் தலமாக மாற்றும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டன என்று நம்பப்படுகிறது.

பழமையான ஜனார்த்தன சுவாமி கோயில், மனதைக் கவரும் அதன் இயற்கை அழகு, கான்வா போன்ற புனிதமான முனிவர்களுக்கு புனிதமான தியானத் தலமாக அதன் பங்கு ஆகியவற்றை உள்ளடக்கிய வர்கலாவின் ஆழந்த வரலாற்று முக்கியத்துவம், அதன் தனித்துவமான, இயற்கையாக உருவான குளியல் படித்துறைகள், மலைகளால் சூழப்பட்ட மலைப்பாங்கான நிலப்பரபு ஆகிய அனைத்து அம்சங்களும் சேர்ந்து குருவைத் தனது தலைமையகத்துக்கு ‘சிவகிரி’ எனப் பெயர் சூட்டுவதற்குத் தூண்டிருக்கலாம்.

‘சிவகிரி’ என்ற சொல் ‘சிவனின் மலை’ என்று பொருள்படுகிறது, இது கைலாசத்தை நினைவூட்டுகிறது. மேலும் இது செழிப்பு நிறைந்த மலையையும் குறிக்கிறது. ’உன்னன்நீதி சந்தேசம்’ என்ற செவ்வியவர்கலாவின் பழமையான பாரம்பரியம் பற்றியும், அதன் தூய்மையான சலசலத்து ஓடும் நீர் ஆதாரங்களைப் பற்றியும் செவ்வியல் போதனைக் கவிதையில் குறிப்பிடப்பட்டிருப்பதால் அது மேலும் சிறப்பை பெறுகிறது. இன்றும் கூட வர்கலா அன்புடன் ‘தட்சிண காசி) (தென்னக காசி) என்று அழைக்கப்படுகிறது. சிவகிரி மலையின் மீது ஜனார்த்தன சுவாமி கோயில், சிவன் கோயில் மற்றும் புனிதமான பாபநாசம் கடற்கரை ஆகியவை காணப்படுவதால் இது அப் பெயரைப் பெற்றுள்ளது. மேற்குக் கடற்கரையாகிய பாபநாசம் இந்துக்களின் புனித யாத்திரைத் தலமாகத் தொடர்ந்து போற்றப்படுகிறது.

சிவகிரி, வரலாற்றுப் புகழ்பெற்ற வர்கலா சுரங்கப் பாதைக்கு அருகே அமைந்துள்ளது. குருவின் தொலைநோக்குப் பார்வையைத் தொடர்ந்து, சுரங்கப்பாதைக்கு அருகில் இருந்து புதர் மண்டியிருந்த ஒரு பகுதி சுத்தம் செய்யப்பட்டு, ஏராளமான மருத்துவ மற்றும் விவசாய மதிப்புமிக்க தாவரங்கள் மிகுந்த கவனத்துடன் நடப்பட்டன. இவை செழித்து வளர்ந்ததால் அந்தப் பகுதி மெய்சிலிர்க்கச் செய்யக்கூடிய, நன்மை பயக்கும் சூழல் அமைப்பாக மாறியது. குருவின் பயணங்கள் அநேகமாக இந்தப் பிராந்தியத்தின் வரலாற்று முக்கியத்துவத்தையும் இயற்கையின் தனித்தன்மை குறித்த அவரது புரிதலையும் விரிவுபடுத்தியிருக்கலாம். கூடுதலாக, அவரது குருவாகிய கும்மணம் பிள்ளை இராமன் பிள்ளை இயற்றிய ‘வர்கலா மகாத்மியம்’ என்ற படைப்பிலிருந்து அவர் பெற்ற உள்நோக்குகள், இந்தப் பிராந்தியத்தை தனது நடவடிக்கைகளின் மையப் பகுதியாக மாற்றும் அவரது முடிவை உறுதிப்படுத்தியிருக்கலாம்.

சிவகிரி யாத்திரை பற்றிய குருவின் கருத்து சமயத்தின் குறுகிய மனப்பான்மையால் கட்டுப்படுத்தப்படவில்லை. குருவின் தத்துவ, கலாச்சார, கல்வி, சமய நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் சிவகிரி மையப் பகுதியாக விளங்கியது. கோயில்கள் தொடர்பான பாரம்பரியக் கருத்துகள் நவீனமாக்கப்பட்டு, அறிவுக் கடவுள் சாரதா தேவியின் பிரதிஷ்டை சிவகிரியில் உள்ள சாரதா மடத்தில் நடைபெற்றது. தீண்டத்தகாதவர்கள் எனக் கருதப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகள் சிவகிரியில் இருந்த ஆசிரமத்தில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு ஆன்மிகக் கோட்பாடுகள் போதிக்கப்பட்டன. அவர்களுக்கு வேதச் சடங்குகள் கற்பிக்கப்பட்டு கோயிலில் பூசாரிகளாக நியமிக்கப்பட்டனர். ஆன்மிக வாழ்க்கையின்பால் ஈர்க்கப்பட்டவர்களுக்கு, அவர்கள் எந்த சாதி, சமயம் அல்லது பிராந்தியத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு சன்னியாச தீட்சை (துறவறத்தின் தொடக்கம்) அளிக்கப்பட்டது. ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்க குரு சிவகிரி மடத்தில் இரவுப் பள்ளிகள், சமஸ்கிருதப் பள்ளிகள், ஆயுர்வேதப் பள்ளிகள், வேதப் பள்ளிகள் ஆகியவற்றை நிறுவினார்.

மற்ற தலைப்புகள்