ஃபோர்ட் கொச்சி

 

ஃபோர்ட் கொச்சியின் வரலாற்று நகரத்தை காண்பதற்கு, நடந்து செல்வதைக் காட்டிலும் சிறந்த வழி இருக்க முடியாது. ஆசுவாசப்படுத்திக் கொண்டு, பருத்தி ஆடையுடனும், மென்மையான காலணிகளுடனும், வைக்கோல் தொப்பியுடனும் வெளியே வாருங்கள். இந்த தீவின் ஒவ்வொரு முனையிலும் வரலாறு பொதிந்துள்ளது, மாயாஜாலமான ஒன்றும் உங்களுக்காக காத்திருக்கிறது. கடந்து விட்ட காலத்திற்கான மாதிரிகளைத் தக்க வைத்துக்கொண்டு அந்த நாட்களின் பெருமையோடு, இன்னும் தனக்கான உலகத்தினைக் கொண்டிருக்கிறது. உங்களால் கடந்த காலத்தை உணர முடியுமென்றால், இந்த வீதிகளில் நடப்பதை எதனாலும் தடுக்க முடியாது.

கே.ஜே. ஹெர்ஷெல் சாலையில் நேராக சென்று இடது புறம் திரும்பினால், நீங்கள் இம்மானுவேல் கோட்டையின் காட்சியைக் காணலாம். இந்த கோட்டை முகப்பு பகுதி ஒரு காலத்தில் போர்த்துகீசியர்களுக்கு சொந்தமாக இருந்தது மற்றும் அது கொச்சின் மகாராஜாவுக்கும் போர்த்துகீசிய மன்னருக்கும் இடையே இருந்த உடன்பாட்டின் சின்னமாக விளங்குகிறது. போர்த்துகீசிய மன்னரின் பெயராலேயே இந்த கோட்டை அழைக்கப்படுகிறது. 1503ல் கட்டப்பட்ட இந்தக் கோட்டை 1538ல் வலுப்படுத்தப்பட்டது. இன்னும் சற்று தூரம் நடந்தால், நீங்கள் டச்சுக் கல்லரையைக் கடப்பீர்கள். 1724ல் அர்ப்பணிக்கப்பட் இது தென்னிந்திய திருச்சபையினால் நிர்விக்கப்படுகிறது. இங்குள்ள கல்லறைக் கற்கள் தங்கள் தாய்நாட்டை விட்டு தங்களின் காலனி சாம்ராஜ்யத்தை விரிவுப்படுத்துவதற்காக வந்த ஐரோப்பியர்களை அமைதியாக நினைவுப்படுத்திக் கொண்டிருக்கிறது.

அடுத்த நீங்கள் பார்ப்பது பழமையான தாக்கூர் ஹவுஸ், அது காலனி சகாப்தத்தின் ஒரு கான்கிரீட் மாதிரியாக நின்றுகொண்டிருக்கிறது. இந்த கட்டிடம் வசீகரமானது. முன்பு குனால் அல்லது மலை பங்களா என்று அழைக்கப்பட்ட இது, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்திய தேசிய வங்கியின் மேலாளர்களின் இல்லமாக இருந்தது. இப்போது, இது தாக்கூர் அன்டு கம்பெனி என்கிற தேயிலை வியாபார நிறுவனத்திற்கு சொந்தமாக இருக்கிறது.

அங்கிருந்து நடந்து சென்றால், மற்றுமொரு வரலாற்று கட்டிடமான டேவிட் அரங்கம் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கும். இது 1695ல் டச்சு கிழக்கிந்திய கம்பெனியால் கட்டப்பட்டது. இந்த ஹென்டிரிக் அட்ரியன் வான் ரீட் டாட் டிரகெஸ்டனோடு தொடர்புடையது. புகழ்பெற்ற டச்சு கமாண்டரான இவர் கேரள விலங்குகளைப்பற்றிய புத்தகமான ஹார்ட்டஸ் மலபாரிக்கஸ்-ஐ வெகுவாகப் புகழ்ந்துள்ளார். எனவே அந்த அரங்கமானது டேவிட் கோடருடைய பெயரால் அழைக்கப்படுகிறது.

அணிவகுப்பு மைதானம் (பரேட் கிரவுண்ட்) என்ற போர்த்துக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் இராணுவ அணி வகுப்பு நடத்திய இடத்தில் நடந்து சென்று கடப்போமானால், இந்தியாவின் மிகப்பழமையான ஐரோப்பிய தேவாலயமான தூய பிரான்சிஸ் தேவாலயத்தைச் சென்றடையலாம். 1503-ல் கட்டப்பட்டதிலிருந்து பல கட்டங்களைக் கடந்து தற்போதுள்ள நிலையை அடைந்துள்ளது. தற்போது இந்த தேவாலயம் தென்னிந்திய திருச்சபையின் கீழ் செயல்பட்டு வருகிறது. வாஸ்கோடகாமா புதைக்கப்பட்ட கல்லறையின் கல்லை இன்றும் நீங்கள் இங்கு காணலாம். அவரது மீதங்கள் 1539ல் போர்சுகலுக்குத் திரும்ப அனுப்ப்பபட்டன.

தேவாலய சாலை (சர்ச் ரோடு) நடந்து செல்வதற்கு அருமையான இடமாகும். அந்த சாலை வழியாக நடந்து சென்றால், அரபிக் கடலிலிருந்து வீசும் குளிர்ந்த காற்று உங்கள் உடலைத் தாலாட்டும். அங்கிருந்து சற்று கீழே நடந்து கடலோரம் வருவோமானால், ஒரு அருமையான நூலகம் மற்றும் விளையாட்டு கோப்பைகளின் தொகுப்புகளும் உள்ள கொச்சின் கிளப்பைக் காணலாம். அழகான இயற்கைக் காட்சிகள் நிறைந்த இந்தப் பூங்கா பிரிட்டீஷாரின் ஆட்சியை இன்றும் மனக்கண் முன் கொண்டு நிலை நிறுத்துவதாக உள்ளது.

சர்ச் ரோட்டிற்கு மறுபடியுமாக திரும்பிச் சென்றால், இடது பக்கத்தில் பாஸ்டியன் பங்களா என்னும் கம்பீரமான கட்டடம் ஒன்று நம் கண்முன் காட்சி தரும். இந்த இந்தோ – ஐரோப்பியன் ஸ்டைலில் கட்டப்பட்ட விந்தையான கட்டடம் 1667-இல் கட்டப்பட்டது. இது பழைய டச்சு கோட்டையான ஸ்ட்ரோம்பேர்க் பாஸ்டியன் என்ற இடத்தில் இது இருப்பதால் அப்பெயர் பெற்றது. இப்போது இது துணை ஆட்சியாளரின் வீடாக உள்ளது.

வாஸ்கோ த காமா சதுக்கம் அருகில் தான் இருக்கிறது. ஒரு குறுகிய உலவு சாலை, சற்றே ஓய்வெடுப்பதற்கான சரியான இடம் இது தான். சுவைமிகுந்த கடல் உணவு மற்றும் இளநீர் கடைகளை உங்கள் ஆவலைத் தூண்டும். வாசனையை சற்றே நுகர்ந்து கொண்டு உங்கள் விழிகளுக்கு விருந்தளிக்கும், உயர்ந்தும் தாழ்ந்தும் இருக்கும் சீன மீன்பிடி வலைகளைக் காணுங்கள். இந்த வலைகள் கிபி 1350 மற்றும் 1450க்கு இடைப்பட்ட காலத்தில் குப்லைகானின் அரசவை வணிகர்களால் அமைக்கப்பட்டன.

புத்துணர்வு பெற்று விட்டீர்கள், இப்போத நீங்கள் பியர்ஸ் லெஸ்லீ பங்களாவுக்கு செல்லலாம், அது ஒரு அழகான மாளிகை, கடந்த காலத்தில் பியர்ஸ் லெஸ்லி அண்டு கம்பெனி என்கிற காபி வியாபர நிறுவனத்தின் அலுவலகமாக செயல்பாட்டது. இந்த கட்டிடம் போர்த்துகீசிய, டச்சு மற்றும் உள்ளூர் தாக்கங்களைக் கொண்டுள்ளது. நீர்நிலையை ஒட்டியை தாழ்வாரம் மற்றுமொரு வசீகரமாகும். வலது புறம் திரும்பினால், நீங்கள் பழைய ஹார்பர் ஹவுஸுக்கு செல்வீர்கள். அது 1808 கட்டப்பட்டது மற்றும் காரியட் மோரன் அண்டு கோ என்கிற தேயிலை தரகு நிறுவனத்திற்கு சொந்தமானது. அருகில் இருப்பது கோடர் ஹவுஸ், இந்த மாபெரும் கட்டிடம் சாமுவேல் எஸ். கோடர் என்கிற கொச்சின் எலக்ட்ரிக் கம்பெனியை சார்ந்தவரால் 1808ல் கட்டப்பட்டது. இந்த கட்டமைப்பு காலனிய கட்டிடக்கலையிலிருந்து இந்திய-ஐரோப்பிய கட்டிடக்கலைக்கான மாற்றத்தை காட்டுக்கிறது.

அங்கிருந்து மேலும் வலதுபுறம் செல்வோமானால் நாம் பிரின்சஸ் தெருவைச் சென்றடையலாம். இங்கு மனதைக் கொள்ளை கொள்ளும் அழகிய பூக்களைக் கடைகளில் காணலாம். இந்தப் பகுதியிலுள்ள மிகப் பழமையான தெருவாக இது இருப்பதால் சாலையின் இருபக்கங்களிலும் ஐரோப்பிய ஸ்டைல் குடியிருப்புகளைக் காணலாம். இங்கு அமைந்துள்ள லோஃபர் கார்னர் உல்லாசத்தையும், மகிழ்ச்சியையும் விரும்புகிறவர்களுக்கு ஒரு நல்ல பாரம்பரிய ஹேங்கவுட் -ஆக உள்ளது.

லோஃபர்ஸ் கார்னரிலிருந்து வடக்கு நோக்கி சென்றால், நீங்கள் போர்த்துக்கீசியர்களால் கட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க சான்டா குரூஷ் தேவாலயத்தைக் காணலாம். இது 4-ஆம் போப் பாலால் 1558-இல் தேவாலயமாக அபிஷேகிக்கப்பட்டது. 1984-இல் போப் பாண்டவர் இரண்டாம் ஜான்பால் இதனை பாசிலிகாவாக அறிவித்தார். அதனைப் பார்த்த பின்னர் நீங்கள் 1808-இல் கட்டப்பட்ட ஒரு பரம்பரை பங்களாவாக இருந்து தற்போது உயர்நிலைப்பள்ளியாக செயல்படும் இடத்தைப் பார்க்கலாம். அங்கிருந்து மேலும் நடந்து திரும்பவும் பிரின்சஸ் தெரு மற்றும் ரோஸ் தெருவிற்குச் சென்றடையலாம். அங்கு வாஸ்கோடகாமா வசித்ததாக கூறப்படும் வாஸ்கோ ஹவுஸ்  நீங்கள் காணலாம். இந்த பாரம்பரிய மற்றும் அடையாளச் சின்னமாக உள்ள ஐரோப்பிய வீடு கொச்சியிலுள்ள பழைமையான போர்த்துக்கீசிய குடியிருப்புகளுள் ஒன்றாக உள்ளது.

அங்கிருந்து இடப்பக்கமாகத் திரும்பி ரிட்ஸ்டாலே ரோடு நோக்கிச் சென்றால் பராடே கிரவுண்ட்டை நோக்கி இருக்கும் பெரிய மரக் கேட்டான VOC கேட்டைக் காணலாம். 1740-இல் கட்டப்பட்ட இந்த கேட் டச்சு  கிழக்கிந்திய கம்பெனியின் மோனோகிராமை (VOC) பெயராகக் கொண்டுள்ளது. அதன் அருகில் கொச்சியில் உள்ள பிரிட்டீஷ் கிளப் அங்குள்ள நான்கு கிளப்களிலும் மிகச் சிறந்த யுனெட்டட் கிளப்பாக உள்ளது. இப்போது அது பக்கத்திலுள்ள தூய பிரான்சிஸ் தொடக்கப்பள்ளியின் வகுப்பறையாக செயல்பட்டு வருகிறது.

இங்கிருந்து நேரே நடந்து சென்றால், அந்த ரோட்டின் முடிவில் உள்ள பிஷப் ஹவுஸ்-ஐ நீங்கள் சென்றடையலாம். இது 1506ல் கட்டப்பட்டதாகும். இது முன்பு போர்த்துக்கீசிய ஆளுநரின் வீடாக இருந்தது. இது பராடே கிரவுண்ட் அருகிலுள்ள சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. இந்த வீட்டின் முகப்புப்பகுதி ஐரோப்பிய கலைநயமிக்க பெரிய வளைவுகளைக் கொண்டதாக உள்ளது. இந்தக் கட்டடம் டாம் ஜோஸ் கோம்ஸ் ஃபெரிரா என்னும் கொச்சி டயோசிசனின் 27-வது பிஷப்பிற்குச் சொந்தமானதாகும். இவர் இந்தியாவிலிருந்து பர்மா, மலேசியா மற்றும் சிலோன் போன்ற நாடுளுக்கு நாடு கடத்தப்பட்டார்.

ஆம், இப்போது நமது நடைபயணத்தை முடித்துக் கொள்வதற்கான நேரம். உங்கள் மனதில் ரீங்காரமிடும் கடந்த காலத்தின் உணர்வுகளுடனும், உங்கள் கண்களில் நிற்கும் மனமயக்கும் காட்சிகளுடனும், உங்கள் நாவில் நின்றிருக்கும் சுவையுடனும், உங்கள் இதயம் மற்றொரு நடைபயணத்திற்கு ஏங்குவதில் ஆச்சரியமில்லை.

கொச்சி பற்றி மேலும் அறிந்து கொள்ளுங்கள்.

அங்கே செல்வதற்கு

அருகாமையில் உள்ள இரயில் நிலையம்: எர்ணாகுளம், மெயின் போட்ஜெட்டியிலிருந்து 1 1/2 கிமீ. அருகாமையில் உள்ள விமானநிலையம் : கொச்சி சர்வதேச விமான நிலையம், எர்ணாகுளத்திலிருந்து சுமார் 30 கிமீ தொலைவில் உள்ளது.

அமைவிடம்

பரப்பாங்கு: 9.964793, நெட்டாங்கு: 76.242943

வரைபடம்

District Tourism Promotion Councils KTDC Thenmala Ecotourism Promotion Society BRDC Sargaalaya SIHMK Responsible Tourism Mission KITTS Adventure Tourism Muziris Heritage

கட்டணமில்லா தொலைபேசி எண்: 1-800-425-4747 (இந்தியாவிற்குள் மட்டும்)

சுற்றுலாத் துறை, கேரள அரசு, பார்க் வியூ, திருவனந்தபுரம், கேரளா, இந்தியா – 695 033
தொலைபேசி: +91 471 2321132, ஃபேக்ஸ் : +91 471 2322279, மின்னஞ்சல்: info@keralatourism.org.
அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை © கேரளா சுற்றுலா 2020. பதிப்புரிமை | பயன்பாட்டு விதிகள் | குக்கீ பாலிசி | தொடர்பு கொள்ளுங்கள்.
உருவாக்கி பராமரிப்பவர்கள் : இன்விஸ் மல்டிமீடியா.

×
This wesbite is also available in English language. Visit Close