கோவளம்

 

கோவளம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற மூன்று அடுத்தடுத்த பிறை போன்ற கடற்கரைகளைக் கொண்டது. அது 1930கள் முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு விருப்பமான இடமாக இருந்து வருகிறது. கடற்கரையில் இருக்கும் ஒரு பெரிய பாறை கடல்முனை கடற்குளியலுக்கு பொருத்தமான அமைதியான நீரின் அழகிய கடற்கரையை உருவாக்கியுள்ளது.

இங்கு பல்வேறு வகையான பொழுதுபோக்கு  அம்சங்கள் கிடைக்கின்றன. சூரியகுளியல், நீச்சல், மூலிகை மருந்து மசாஜ், சிறப்பு கலாச்சார நிகழ்ச்சிகள், கட்டுமர பயணம் ஆகியவை அவற்றுள் சில. வெப்பமான சூரிய ஒளி உடலில் பட்டு வெகு விரைவில் உடலின் தோல் வண்ணத்தை மாற்றும் தன்மைகொண்டதாக உள்ளது. இந்தக் கடற்கரை பிற்பகல் தொடங்கி இரவு வரை சுறுசுறுப்பாக காணப்படும். கடற்கரை வளாகத்தில் குறைந்தவிலை காட்டேஜ்கள், ஆயுர்வேத மருத்துவ தங்கு விடுதிகள், மாநாட்டு வசதிகள், பொருட்கள் வாங்கும் பகுதிகள், நீச்சல் குளங்கள், யோகா மற்றும் ஆயுர்வேத மசாஜ் மையங்கள் என்று ஏராளமானவை இங்கு உள்ளன.

கோவளத்தில் ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் முதல் பட்ஜெட் ஓட்டல்கள்ள் வரை தங்கும் வசதிகள் இருக்கின்றன மற்றும் கான்டினென்டல் வகைகள் முதல் தென்னிந்திய உணவு வகைகள் வரை உணவகங்கள் மற்றும் காஃபெடேரியாக்கள் கிடைக்கப் பெறுகின்றன.

கேரளாவின் தலை நகரமான திருவனந்தபுரம் கோவளத்திலிருந்து 16 கி.மீ. தொலைவிலேயே உள்ளது. அங்கு செல்வதற்கு எந்தப் பிரச்சனையும் கிடையாது. ஆனால் விடுமுறை நாட்களில் அங்கு சென்றால் கோவளத்தில் தங்கி அந்த நகரைச் சுற்றிப் பார்த்து வருவது நன்று.

நேப்பியர் அருங்காட்சியகம், ஸ்ரீ சித்ரா கலைக்கூடம் மற்றும் பத்மநாபசுவாமி கோவில் போன்ற பார்ப்பதற்கு சுவாரசியமான பல இடங்களை திருவனந்தபுரம் நகரம் கொண்டுள்ளது. SMSM இன்ஸ்டிட்யூட், மாநில அரசுக்கு சொந்தமான கைவினை அருங்காட்சியகம், இனம் சார்ந்த அரிய பொருட்கள் மற்றும் பிறப் பொருட்களுக்கு ஏற்ற இடமாகும்.

இங்கே செல்வதற்கு

அருகாமை இரயில் நிலையம்: திருவனந்தபுரம் சென்ட்ரல், சுமார் 16 கிமீ தூரத்தில் உள்ளது
அருகாமையில் உள்ள விமானநிலையம்: திருவனந்தபுரம் சர்வதேச விமானநிலையம், சுமார் 10 கிமீ தூரத்தில் உள்ளது

அமைவிடம்

பரப்பாங்கு: 8.402074, நெட்டாங்கு: 76.978426

புவியியல் தகவல்

வருகை தருவதற்கான சிறந்த நேரம்: செப்டம்பர் முதல் மார்ச் வரை
குத்துயரம் : கடல்மட்டம்

வரைபடம்

District Tourism Promotion Councils KTDC BRDC Sargaalaya SIHMK Responsible Tourism Tourfed KITTS Adventure Tourism Muziris Heritage KTIL

கட்டணமில்லா தொலைபேசி எண்: 1-800-425-4747 (இந்தியாவிற்குள் மட்டும்)

சுற்றுலாத் துறை, கேரள அரசு, பார்க் வியூ, திருவனந்தபுரம், கேரளா, இந்தியா – 695 033
தொலைபேசி: +91 471 2321132, ஃபேக்ஸ் : +91 471 2322279, மின்னஞ்சல் : info@keralatourism.org.
அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை,© கேரளா சுற்றுலா 2017. பதிப்புரிமை | பயன்பாட்டு விதிகள். .