வயநாடு

 

வயநாட்டில் ”பொறுப்புள்ள மற்றும் நிலைத்திருக்கும் சுற்றுலா”வுக்கான ஒரு கலாச்சாரத்தை பேணுவதில் முக்கிய பங்கெடுத்திருக்கும் வயநாடு சுற்றுலா நிறுவனம் (WTO) என்னும் நிறுவனத்தால் சிந்தித்து ஊக்குவிக்கப்படுகிற வயநாட்டின் வடக்கு மாவட்டத்தின் முதன்மையான நான்கு தலங்கள் இங்கே முன்னிலைப்படுத்தப்படுகின்றன.

அந்த நான்கு தடங்களில் முதலில் நாங்கள் அறிமுகப்படுத்துவது ”வெளிப்புறத் தடம்” அது வயநாடு மாவட்டதின் பின்வரும் அமைவிடங்களை உள்ளடக்குகிறது.

செம்பார் சிகரம்

கடல் மட்டத்திலிருந்து 2100 மீட்டர் உயரத்திலிருக்கும் செம்பரா சிகரம் வயநாட்டின் தென்பகுதியிலுள்ள மேப்பாடி அருகில் அமைந்துள்ளது. இது இந்தப் பகுதியில் அமைந்துள்ள மிக உயரமான சிகரம் ஆகும். இந்தச் சிகரத்தில் ஏறுவது ஒருவரின் உடல் தைரியத்திற்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும். செம்பரா சிகரத்தில் ஏறுவது ஒரு மகிழ்ச்சியான அனுபவமாகும். இந்த மடிப்பு மலையில் ஏறும்போது ஒவ்வொரு கட்டத்திலிருந்தும், நாம் வயநாட்டின் அமைப்பினைக் கண்டு மகிழலாம். உச்சிக்குச் சென்றடையும் போது வயநாட்டின் முழுகாட்சியும் நம் கண்முன் விரியும். சிகரத்தில் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் ஒரு நாள் முழுவதும் ஆகும். சிகரத்தின் உச்சியில் தங்குபவர்களுக்கு அது மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். அங்கு தங்க விரும்புகிறவர்கள் வயநாட்டிலுள்ள கால்பெட்டா பகுதியில் அமைந்துள்ள மாவட்ட சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தை அணுகி அனுமதி பெற வேண்டும்.

நீலிமலை

வடநாட்டின் தென்கிழக்குப் பகுதியில் கல்பேட்டாவிற்கு அருகில் அமைந்துள்ளது நீலிமலை பார்க்கத்தக்கதும் மற்றும் சுல்தான் பத்தேரியும் அமைந்த இடமாகும். நீலிமலை வெவ்வேறு மலையேறு வழிகளைக் கொண்டுள்ளதால் மலையேறுபவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் ஒரு இடமாகும். நீலிமலை உச்சியிலிருந்து மீன்முட்டி அருவிகள் மற்றும் அருகிலுள்ள பள்ளத்தாக்குகளைக் காண்பது சிலிர்ப்பூட்டும் காட்சிகளாகும்.

மீன்முட்டி நீர்வீழ்ச்சி

நீலிமலையில் அமைந்துள்ள, கண்கவர் மீன்முட்டி நீர்வீழ்ச்சி ஊட்டியையும் வயநாட்டையும் இணைக்கும் முக்கிய சாலையிலிருந்து 2 கிமீ நடந்து செல்லும் பாதையில் சென்று அடையலாம். சுமார் 300 மீட்டர் உயரத்திலிருந்து விழும் மூன்று நிலை அருவியான இது வயநாடு மாவட்டத்தின் மிகப்பெரிய அருவியாகும்.

செதலயம்

வயநாட்டில் வருகையாளர்களை ஈர்க்கும் மற்றுமொரு நீர்வீழ்ச்சி செதலயம் நீர்வீழ்ச்சியாகும், இது வயாநாட்டின் சுல்தான் பத்தேரிக்கு அருகில் அமைந்துள்ளது. மீன்முட்டியை ஒப்பிடும் போது இது சிறிய நீர்வீழ்ச்சியாகும். நீர்வீழ்ச்சி மற்றும் அதனையொட்டி அமைந்துள்ள இடங்கள் நடைபயணங்களுக்கும் பறவையாளர்களுக்கும் ஒரு சிறந்த இடமாகும்.

பக்ஷிபாதாளம்

பக்ஷிபாதாளம் கடல் மட்டத்திலிருந்து 1700 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பிரம்மகிரி குன்றுகளில் உள்ள அடர்ந்த காடுகளின் நடுவே அமைந்துள்ளது. இந்தப் பகுதி பாறைகளும் மிகப்பெரிய குன்றுகளும் நிறைந்தவையாக இருக்கும். இங்குள்ள மிகவும் ஆழமான குகைகள் பல்வேறு காட்டுப் பறவைகள், விலங்குகள் மற்றும் வெவ்வேறு வகையான தாவரங்கள் ஆகியவற்றின் வாழிடமாக உள்ளன. பக்ஷிபாதாளம் மானந்தவாடிக்கு அருகில் அமைந்துள்ளது. திருநெல்லியில் இருந்து வனத்தின் ஊடே 7 கிமீ இந்தப் பகுதிக்கு நடந்து செல்ல வேண்டும். பக்ஷிபாதாளம் செல்வதற்கு வடக்கு வயநாடு மாவட்ட வனஅலுவலரின் அனுமதி வேண்டும்.

பான்சுரா சாகர் அணை

பான்சுரா சாகர் அணை இந்தியாவின் மிகப்பெரிய அணை எனக் குறிப்பிடப்படுகிறது. இந்த அணை வயநாடு மாவட்டத்தில் தென்பகுதியில் கரலாடு ஏரிக்கு அருகில் அமைந்துள்ளது. பான்சுரா சாகர் அணைத் திட்டம் உள்ள இடம்தான் பான்சுரா சிகரத்திற்கு ஏறுவதற்கான தொடக்க இடமாக உள்ளது. இங்குள்ள பார்க்கத்தக்க முக்கிய அம்சங்கள், நீர்த்தேக்கங்களால் சூழப்பட்ட தீவு போன்ற பகுதிகளாகும். வயநாட்டின் கண்கவர் காட்சிகள், ஒலிகள் மற்றும் மணங்களை கவர்ந்து கொண்ட பின்னர், நீங்கள் நறுமணப் பொருட்கள், காபி, தேயிலை, மூங்கில் தயாரிப்புகள், தேன் மற்றும் மூலிகைத் தாவரங்கள் போன்ற சில அmரிய வயநாட்டு சிறப்புப் பொருட்களையும் வாங்கலாம்.

வயநாட்டின் ”வெளிப்புற தடங்கள்” பற்றிய மேலும் விவரங்களுக்கு, தயவு செய்து வயநாடு சுற்றுலா நிறுவனத்தினைத் தொடர்பு கொள்ளுங்கள.

தொடர்பு விவரங்களை

பொது செயலாளர் வயநாடு சுற்றுலா நிறுவனம் வாசுதேவ இடம், பொழுதனா (தபால்), வயநாடு, கேரளா, இந்தியா. அஞ்சல்-673575 தொலைபேசி: +91-4936-255308, Fax.+91-4936-227341 மின்னஞ்சல்: mail@wayanad.org

அங்கே செல்வதற்கு

அருகாமை இரயில் நிலையம்: சுமார் 62 கிமீ தூரத்தில் கோழிக்கோடு இரயில் நிலையம் அருகாமை விமானநிலையம்: 65 கிமீ தூரத்தில் உள்ள கோழிக்கோடு சர்வதேச விமானநிலையம்.

அமைவிடம்

பரப்பாங்கு: 11.75847, நெட்டாங்கு: 76.093826

வரைபடம்

District Tourism Promotion Councils KTDC Thenmala Ecotourism Promotion Society BRDC Sargaalaya SIHMK Responsible Tourism Mission KITTS Adventure Tourism Muziris Heritage

கட்டணமில்லா தொலைபேசி எண்: 1-800-425-4747 (இந்தியாவிற்குள் மட்டும்)

சுற்றுலாத் துறை, கேரள அரசு, பார்க் வியூ, திருவனந்தபுரம், கேரளா, இந்தியா – 695 033
தொலைபேசி: +91 471 2321132, ஃபேக்ஸ் : +91 471 2322279, மின்னஞ்சல்: info@keralatourism.org.
அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை © கேரளா சுற்றுலா 2020. பதிப்புரிமை | பயன்பாட்டு விதிகள் | குக்கீ பாலிசி | தொடர்பு கொள்ளுங்கள்.
உருவாக்கி பராமரிப்பவர்கள் : இன்விஸ் மல்டிமீடியா.

×
This wesbite is also available in English language. Visit Close