Trade Media
     

படகு இல்லம்


படகு இல்லத்தில் கேரளா முழுவதும் உல்லாச கடற்பயணம் செய்யலாம்.

கேரளாவின் கடற்காயல்களின் மீது படகு இல்லத்தில் பயணம் சென்றிருக்கின்றீர்களா? இல்லை என்றால் அதனை உடனே செய்யுங்கள். இது உண்மையிலேயே ஒரு மகிழ்ச்சியான மறக்க முடியாத அனுபவமாகும்.

இன்றயபடகு இல்லங்கள்பெரிய வடிவில்காணப்படுகின்றன. இவை ஓய்வு நேரப் பயணத்திற்காக மெதுவான சிற்றுலா செல்லுவதற்காக பயன்படுத்தப்படுகின்றன. உண்மையில் அவை பழைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட கட்டுவள்ளங்களின் மறுவடிவமே ஆகும். உண்மையான கட்டுவள்ளங்கள் டன் கணக்கான அரிசி மற்றும் வாசனை பொருட்களை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்டன. ஒரு தரமான கட்டுவள்ளம் 30 டன் அளவு பொருட்களை குட நாட்டிலிருந்து கொச்சி துறைமுகம் வரை கொண்டு செல்லக்கூடியது.

கட்டுவள்ளம் தென்னங்கயிற்றினால் சேர்த்து கட்டப்பட்டிருக்கும். படகு கட்டும் போது ஒரு சிறு ஆணி கூட பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. படகு, பலாக்கட்டைகளை தென்னங்கயிற்றோடு இணைத்து கட்டி ஒன்று சேர்த்து உருவாக்கப்படும். அதன் பின்னர் அது முந்திரி தோலை உருக்கி எடுக்கப்பட்ட எரிகார கருப்பு நிற பசையால் மேற்பூச்சு பூசப்படும். கவனமான பராமரிப்பின் காரணமாக தலைமுறை தலை முறையாக கட்டுமரம் நல்ல நிலையில் இருக்கும்.

கட்டுவள்ளத்தின் ஒரு பகுதி மூங்கில் மற்றும் தென்னங்கயிறு கொண்டு பிரிக்கப்பட்டு, அது படகு பணியாளர்களுக்கான ஓய்வு அறை மற்றும் சமையலறையாக இருக்கும். உள்ளேயே உணவு தயாரிக்கப்படும் மற்றும் காயல்களிலிருந்து பெறப்பட்ட புதிதாக சமைக்கப்பட்ட மீன் அதற்கு துணை உணவாக இருக்கும்.

நவீன கால டிரக் வண்டிகள் போக்குவரத்தில் இடம் பிடித்த போது சிலர் இந்த படகுகளை வைத்திருப்பதற்கு புதிய வழியை கண்டு பிடித்தனர். 100 வருடங்களுக்கு முன்பு உள்ள படகுகளையே பெரும்பாலும் சிலர் வைத்திருந்தனர். பயணிகள் அமர்வதற்கு சிறப்பு அறைகள் கட்டியதன் மூலம் இந்த படகுகள் அழியும் தருவாயிலிருந்து மீண்டு, தற்போதுள்ள செல்வாக்குமிக்க இன்பச்சுற்றுலா பயணத்திற்கு பயன்பட்டு வருகின்றன.

தற்போது ஆலப்புழாவில் மட்டும் 500 க்கும் அதிகமான படகு இல்லங்களை காயல்களின் மீது காண்பது ஒரு சிறப்பு காட்சியாக உள்ளது.

கட்டுவள்ளங்களை படகு இல்லங்களாக மாற்றிய போது இயற்கை தயாரிப்புகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது கவனத்தில் கொள்ளப்பட்டது. மூங்கில் பாய்கள், கம்புகள் மற்றும் கமுக மரக்கட்டைகள் கூரைகளாகவும், தென்னை பாய்கள் மற்றும் மரப்பலகைகள் தரைக்காகவும் மற்றும் தென்னம்கட்டை மற்றும் கயிறு ஆகியவை படுக்கைகளாகவும் பயன்படுத்தப்பட்டன. வெளிச்சம் இருந்தாலும் சூரிய பதாகைகளும் வெளிச்சத்திற்காக பயன்படுத்தப்பட்டன.

தற்போது படகு வீடானது நவீன ஹோட்டல் வசதிகளோடு படுக்கை அறைகள், நவீன கழிப்பறை, ஆடம்பர வரவேற்பு அறை, சமையலறை, எல்லாத் திசைகளையும் பார்க்கும் படியான பால்கனி போன்றவற்றைக் கொண்டவையாக உள்ளன. பகுதியாக மறிக்கப்பட்ட மரத்தாலான வளைந்த கூரை அல்லது கமுகங்கட்டை வழியாக தடையில்லாமல் வெளிப்புற காட்சிகளைக்காண முடியும். பெரும்பாலான படகுகள் உள்ளூர் கட்டுமரங்களால் கழி வளைத்து ஒட்டிச் செல்லும் போது, சில படகுகள் 40 குதிரைதிறன் எஞ்சின் பொருத்தப்பட்ட விசைப்படகுகளாக உள்ளன. இரண்டோ அல்லது அதற்கு மேற்பட்ட படகு இல்லங்கள் இணைக்கப்பட்டு பெரிய குழுவாக வரும். பார்வையாளர்களுக்காக இவ்வகை படகு இல்லங்கள் உருவாக்கப்படுகின்றன.

உண்மையாகவே ஒரு படகு சவாரியில் உள்ள விந்தை யாதெனில் மனதைக் கொள்ளைக் கொள்ளும் காட்சிகள் மற்றும் கேரளாவின் அடையமுடியாத கிராமப்புரங்களை உங்களால் இத்தகைய படகு சவாரி மூலமே அடைய- முடியும். இப்போது அப்படி ஏதாவது இருக்க முடியுமா?

கேரளா சுற்றுலாவில் பாரம்பரியமிக்க ஓட்டுநர்கள் பட்டியலில் இருந்து ஒரு படகு இல்லஓட்டுநரைத் தேர்வு செய்ய தயவு செய்து இங்கே கிளிக் செய்க.


 

Photos
Photos
information
Souvenirs
 
     
Department of Tourism, Government of Kerala,
Park View, Thiruvananthapuram, Kerala, India - 695 033
Phone: +91-471-2321132 Fax: +91-471-2322279.

Tourist Information toll free No:1-800-425-4747
Tourist Alert Service No:9846300100
Email: info@keralatourism.org, deptour@keralatourism.org

All rights reserved © Kerala Tourism 1998. Copyright Terms of Use
Designed by Stark Communications, Hari & Das Design.
Developed & Maintained by Invis Multimedia