பெரியார் புலிகள் காப்பகம், தேக்கடி

 

தேக்கடி என்கிற வார்த்த்தையின் ஒலி யானைகள், முடிவுறா மலைகளின் தொடர்கள் மற்றும் நறுமணப்பொருட்களின் தோட்டங்களை நோக்கி உந்துகிறது. இந்தியாவின் முக்கிய வனவிலங்கு சரணலாயங்களில் தேக்கடியின் பெரியார் காடுகளும் ஒன்றும். நடைபயணங்கள் மற்றும் மலைபாதைளை தழுவியிருக்கிற அழகிய தோட்டங்கள் மற்றும் மலை நகரங்கள் மாவட்டம் முழுவதும் பரந்திருக்கிறது.

பெரியார் காடுகளின் வளம்
தாவரம்: 171 புல்லினங்களையும் 143 ஒண்செடிகளையும் உள்ளடக்கி 1965 க்கும் மேற்பட்ட ஒண்தாவரங்கள் இங்கே உள்ளன. போடோகார்பஸ் வாலிசியானஸ் என அறிவியல் ரீதியாக அறியப்படுகிற ஒரே தென்னிந்திய ஊசியிலை மரங்கள் பெரியார் புலிகள் காப்பகத்தில் தான் வளர்க்கப்படுகின்றன.

விலங்குகள்:
பாலூட்டிகள்: ஆசிய யானை, வங்கப் புலி, இந்திய காட்டெறுமை, சாம்பார் மான், இந்திய காட்டு நாய், சிறுத்தை, குரைக்கும் மான், மற்றும் நீர்க்கீரி உள்ளடங்கிய விலங்குகளை பெரியார் ஏரியில் பயணம் செய்யும் போது பார்க்கலாம். நீலகிரி வரையாடு பாறைப்பகுதிகளில் காணப்படும் அதே சமயம் அழிந்து வரும் சிங்கவால் குரங்குகள் பசுமையான காடுகளில் காணலாம். பொன்னிறக் குரங்கு மற்றும் நீலகிரி லங்கூர் குரங்குகள் படகுதுறைகளுக்கு அருகில் இரைதேடிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.

பறவைகள்: புலம் பெயரும் பறவைகளை உள்ளிட்டு 265 வகை பறவைகள் உள்ளன. மலபார் சாம்பல் இருவாயன், இந்திய கருப்பு வெள்ளை இருவாயன், வெள்ளை வயிற்று வால் காக்கை, பலவகை கரிச்சான்கள், மரங்கொத்திகள், ஈப்பிடிப்பான்கள், சிலம்பன்கள், கண்கவர் தீக்காக்கைள் முதலியன படகுத் துறைக்கு அருகில் காணலாம்.

ஊர்வன: நாகப்பாம்பு, விரியன் பாம்புகள், கட்டுவிரியன், பல எண்ணிக்கையிலான விஷமற்ற பாம்புகள், உடும்பு.

நீர்நில வாழ்வன: வண்ணமயமான மலபார் பறக்கும் தவளைகள் போன்ற தவளைகள், பூஞ்சைத் தவளை, இரு நிறத் தவளைகள்,  பலவகை தேரை இனங்கள், மற்றும் சிசீலியன்கள்

மீன்கள்:  பெரியார் ஏரி மற்றும் நீரோடைகளில் பூமீன் கெண்டை என்னும் அருகி வரும் இந்திய விளையாட்டு மீன் உள்ளிட்ட மீன் இனங்கள் உள்ளன.

படகிலிருந்து நீர்க்கீரியை அடிக்கடி பார்க்கலாம்.

தோட்டங்கள்:  தேயிலை, ஏலக்காய், மிளகு மற்றும் காபி தோட்டங்கள் புலிகள் காப்பகத்தினை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ளன.

கண்காணிப்பு கோபுரங்கள் :  பெரியார் புலிகள் காப்பகத்திற்குள்ளே சில கண்காணிப்புக் கோபுரங்கள் உள்ளன, அவை வனவிலங்குகளைப் பார்ப்பதற்கு அற்புதமானவை. முன்பதிவுகள் தேக்கடியில் உள்ள வனத் தகவல் மையத்தில்   செய்யப்படலாம். தொலைபேசி : +91-4869-222027

பெரியாரில் சுற்றுலா செயல்பாடுகளை பற்றி மேலும் அறிந்து கொள்ள , இங்கே க்ளிக் செய்யவும்:- பெரியார் புலிகள் காப்பகம்.

தொடர்வு விவரங்கள்

கள இயக்குநர் (புலிகள் திட்டம்) கள இயக்குநர் அலுவலகம் எஸ்.எச். மவுண்ட், கோட்டயம், கேரளா, இந்தியா – 686 006 தொலைபேசி : +91 481 2311470 மின்னஞ்சல்: fd@periyartigerreserve.org வலைதளம்: www.periyartigerreserve.org துணை இயக்குநர் (பெரியார் கிழக்கு) பெரியார் புலிகள் காப்பகம் தேக்கடி கேரளா, இந்தியா - 685 536 தொலைபேசி: +91 4869 222027 மின்னஞ்சல்: dd@periyartigerreserve.org

அங்கே செல்வதற்கு

அருகாமை இரயில் நிலையம் : கோட்டாயம் இரயில்நிலையம், தேக்கடியிலிருந்து சுமார் 110 கி.மீ. அருகாமை விமானநிலையம் : மதுரை சுமார் 140 கி.மீ. மற்றும் கொச்சின் சர்வதேச விமானநிலையம், சுமார் 190 கி.மீ தேக்கடியிலிருந்து.

அமைவிடம்

பரப்பாங்கு : 9.4679, நெட்டாங்கு: 77.143328

புவியியல் தகவல்

மழைப்பொழிவு: 25 செ.மீ.

வரைபடம்

District Tourism Promotion Councils KTDC Thenmala Ecotourism Promotion Society BRDC Sargaalaya SIHMK Responsible Tourism Mission KITTS Adventure Tourism Muziris Heritage

கட்டணமில்லா தொலைபேசி எண்: 1-800-425-4747 (இந்தியாவிற்குள் மட்டும்)

சுற்றுலாத் துறை, கேரள அரசு, பார்க் வியூ, திருவனந்தபுரம், கேரளா, இந்தியா – 695 033
தொலைபேசி: +91 471 2321132, ஃபேக்ஸ் : +91 471 2322279, மின்னஞ்சல்: info@keralatourism.org.
அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை © கேரளா சுற்றுலா 2020. பதிப்புரிமை | பயன்பாட்டு விதிகள் | குக்கீ பாலிசி | தொடர்பு கொள்ளுங்கள்.
உருவாக்கி பராமரிப்பவர்கள் : இன்விஸ் மல்டிமீடியா.

×
This wesbite is also available in English language. Visit Close