திறந்த காயல் பகுதிகளையும், அலையாத்திக் காடுகள் சூழ்ந்த இடங்களுக்கு இட்டுச் செல்லும் அமைதியான நீர்வழிகளையும் கொண்ட கலவையான சூழலில் கயாக்கிங் செய்ய விரும்பினால், கொல்லம் அதற்குப் பொருத்தமான இடம் ஆகும். இங்குள்ள வழித்தடங்கள் கால்வாயை விட அகலமானதாகத் தோன்றலாம், ஆனால் அவை அமைதியாகவும் ஆரம்பநிலையாளர்களுக்கு ஏற்புடைய வகையிலும் உள்ளன. பிரதிபலிப்புப் புகைப்படங்கள் எடுப்பதற்கும் இப் பகுதி மிகவும் சிறந்தது. ஏனெனில், குறிப்பாக காலை நேரத்தின் முற்பகுதியிலும், அந்திவேளையிலும் நீர் பெரும்பாலும் அமைதியாக இருக்கும்.


விரைவுத் தகவல்

அமைவிடம், போக்குவரத்து வசதிகள்

கயாக்கிங் மற்றும் சிறுபடகோட்ட (கனோயிங்) வழித்தடங்கள் காயல்களிலும், கொல்லம் மாவட்டத்தின் ஏரிப் பகுதிகளிலும் கிடைக்கின்றன. உள்ளூர்ப் போக்குவரத்து மூலம் இந்த இடங்களுக்கு நாம் எளிதில் செல்ல முடியும்.

தொலைவு

கொல்லம் நகரம்: 0-5 கி.மீ. (ஏரிக் கரையோரம் தொடங்கும் பல நிகழ்வுகளுக்கு)

திருவனந்தபுரம் நகரம்: 65–75 கி.மீ.

வேலை நேரங்கள்

இந்தச் செயல்பாடு காலை முதல் மாலை வரை கிடைக்கின்றது.

மொத்தக் கால அளவு

தேர்ந்தெடுக்கப்படும் வழித்தடத்தைப் பொறுத்து இந்த அனுபவம் பொதுவாக 1 முதல் 3 மணிநேரம் நீடிக்கிறது.

கடினத்தன்மை நிலை

இந்தச் செயல்பாடு எளிதானது முதல் மிதமான சிரமம் கொண்டது வரை அமைகிறது.

பருவம்

அக்டோபர் முதல் மார்ச் வரை இந்த அனுபவம் சிறப்பானதாக இருக்கும்.

தோராயமான செலவு

ஒரு நபருக்கான கட்டணம் பொதுவாக 500 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை வேறுபடுகிறது.

புகைப்படம் மற்றும் ஊடகங்கள்

இந்த அமைப்பு பரந்த கோணப் படப்பிடிப்புக்கு மிகவும் உகந்ததாகும். கேமராக்களை நீர் தெறிக்காமல் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறது.

என்னவெல்லாம் இடம்பெற்றுள்ளன

இந்த அனுபவமானது, கயாக் அல்லது கனோ (சிறுபடகு), படகுத் துடுப்பு, உயிர்க்காப்பு மேலங்கி, அடிப்படை வழித்தட வழிகாட்டுதல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.