ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட இந்தக் காயல் பகுதிகள் பல நுழைவு, வெளியேறும் இடங்களைக் கொண்ட நீக்குப்போக்கான கயாக்கிங் வழித்தட அமைப்பை வழங்குகின்றன. இங்குள்ள நீர்வழித் தடங்கள் மீன்பிடிப் பகுதிகள், சிறிய குடியிருப்புகள், தாவரங்கள் நிறைந்த கரைகள் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளைக் கொண்ட நிலப்பரப்புகளின் ஊடாகச் செல்கின்றன. பருவத்தைப் பொறுத்து இலேசான நீரோட்டங்கள் காணப்பட்டாலும் நீரின் நிலை பெரும்பாலும் அமைதியாகவே காணப்படுகின்றது.


இந்தப் பகுதியில் கயாக்கிங் செய்யும்போது வழித்தடத்தைத் தேவைக்கேற்ப மாற்றியமைத்துக்கொள்ள முடியும் என்பதால், இது குறுகிய மற்றும் நீண்ட நேரப் பயணம் என இரண்டுக்கும் ஏற்றதாக அமைகிறது. இந்தச் சூழல் வேகம் அல்லது தொழில்நுட்பத் திறனை விட சீராகத் துடுப்புப் போடுவதற்கும், இயற்கைக் காட்சிகளை இரசிப்பதற்கும் ஆதரவளிக்கிறது. பெரும்பாலும் நிதானமான குழு துடுப்புப் படகோட்டத்திற்கும், ஆராயும் வகையிலான வழித்தடங்களுக்கும் இப் பகுதி தேர்ந்தெடுக்கப்படுகிறது.


விரைவுத் தகவல்

அமைவிடம், போக்குவரத்து வசதிகள்

கொல்லம் மாவட்டத்தில் நெடுங்கோலம், மீனாடு, உப்புகடவு பகுதிகளில் அமைந்துள்ளது.

தொலைவு

கொல்லம் நகரம்: 8–12 கி.மீ.

வர்க்கலா: 28 கி.மீ.

வேலை நேரங்கள்

தண்ணீர் அமைதியாகவும், சுற்றுப்புறங்கள் மிகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கின்ற காலை நேரங்கள் பெரிதும் விரும்பத்தக்கவை.

மொத்தக் கால அளவு

இந்த அனுபவம் பொதுவாக சுமார் 1 முதல் 3 மணிநேரம் வரை நீடிக்கிறது.

முன்கூட்டியே முன்பதிவு செய்தல்

நீண்ட வழித்தடங்களை உபயோகிப்பதாக இருந்தால், முன்பதிவு செய்யுமாறு பரிந்துரைக்கப்படுகிறது.

கடினத்தன்மை நிலை

இந்தச் செயல்பாடு எளிதானது முதல் மிதமான சிரமம் கொண்டது வரை அமைகிறது.

பருவம்

அக்டோபர் முதல் மார்ச் வரை இந்த அனுபவம் சிறப்பானதாக இருக்கும்.

கட்டுப்பாடுகள்

உள்ளூர் மீன்பிடிச் செயல்பாடுகளின் கால அட்டவணையால் வழித்தடங்கள் பாதிக்கப்படலாம்.

புகைப்படம் மற்றும் ஊடகங்கள்

இந்த அமைப்பு காயல்களையும், இயற்கைக் காட்சிகளையும் படம்பிடிக்க மிகவும் பொருத்தமானதாக உள்ளது.

என்னவெல்லாம் இடம்பெற்றுள்ளன

இணைக்கப்பட்ட நீர்வழிகள், அமைதியான துடுப்புப் படகுப் பயணப் பகுதிகள், நீக்குப்போக்கான வழித்தடத் தேர்வுகள் ஆகியவை இந்த அனுபவத்தில் அடங்கும்.