மலையாளம், தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் சிறந்த படைப்பாளராக விளங்கிய நாராயண குரு, சமஸ்கிருத மற்றும் தமிழ் நூல்களை மொழிபெயர்க்கும் பணியையும் மேற்கொண்டார். ஈஷாவாஸ்யம், பார்யாதர்மம், திருக்குறள், கங்காஷ்டகம், ஒழிவிலொடுக்கம் ஆகியவை இவரது முக்கிய மொழிபெயர்ப்புப் படைப்புகள் ஆகும்.

ஈஷாவாஸ்யம்

ஈஷாவாஸ்யம் என்பது பதினெட்டு மந்திரங்களைக் கொண்ட சுருக்கமான உபநிடதம் ஆகும். குரு அதை இருப்பதிரண்டு செய்யுள்களாக மொழிபெயர்த்தார். உலக நலனுக்கான செயல்களை மேற்கொண்டு தன்னலமின்றி வாழ வேண்டும் என்பதே ஈஷாவாஸ்யத்தின் போதனை ஆகும். உபநிடதத்தின் இரகசியத்தைப் புரிந்துகொண்ட குரு, மூல மந்திரங்களை அவற்றின் பொருளும் முக்கியத்துவமும் நீர்த்த்ப் போகாமல் துல்லியமாக மொழிபெயர்த்தார். ஈஷாவாஸ்யத்தின் முதலாவது மந்திரம் ஒரு சீடனின் முன்னிலையில் ஏக சத்திய நிலையின் மெய்ஞ்ஞான நிலையை அனுபவிக்கும் ஞானம் பெற்ற குருவைச் சித்தரிக்கிறது.


திருக்குறள்

தமிழ் மொழியிலிருந்து குரு மேற்கொண்ட முக்கியமான மொழிபெயர்ப்பு திருக்குறள் ஆகும். அவர் தனது மொழிபெயர்ப்பை 1894-ஆம் ஆண்டில் தொடங்கினாலும், அவரால் அதை முடிக்க முடியவில்லை. அதில் மூன்று பிரிவுகள் மட்டுமே மொழிபெயர்க்கப்பட்டன. 

தமிழ்ப் புலவரும் தத்துவ ஞானியுமான திருவள்ளுவரால் இயற்றப்பட்ட செவ்வியல் தத்துவ நூல் திருக்குறள் ஆகும். இது நான்கு வேதங்களின் சாராம்சத்தையும் உள்ளடக்கிய தமிழ் வேதம் எனக் கருதப்படுகிறது. திருக்குறளைப் பாராயணம் செய்வது மனதைத் தூய்மைப்படுத்தி அதைச் சத்தியத்தை நோக்கி வழிநடத்தும் என்று நம்பப்படுகிறது. குருவின் மொழிபெயர்ப்பின் மூலம், தமிழ்த் தத்துவ நூல்கள் குறித்த குருவின் புரிதலின் ஆழம் தெளிவாகத் தெரிகிறது.


கங்காஷ்டகம்

காளிதாசரால் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் சமஸ்கிருத துதிப்பாடலாகிய கங்காஷ்டகம் பாடலின் முதலாவது செய்யுளை குரு மொழிபெயர்த்துள்ளார். இந்தப் பாடலைத் தனது தாய்மொழியில் மொழிபெயர்க்காமல் தமிழில் மொழிபெயர்க்க குரு எடுத்த முடிவு அவரது தமிழ்ப் புலமையின் மீது அவருக்கு இருந்த நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

குரு தனது சீடர்களுக்குப் பல்வேறு காலங்களில் எடுத்தியம்பிய தொகுப்புகளும், பல்வேறு இடங்களில் இருந்து மீட்கப்பட்ட தொகுப்புகளும் பிற்காலத்தில் 1941-ஆம் ஆண்டில் தர்ம பிரச்சார சபா மூலம் திவ்ய ஸ்தோத்திர ரத்னாவளியாகத் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டன. இந்த வெளியீடு அருவிப்புரத்தில் உண்டுறை சீடராக வசித்த மணம்பூர் கோவிந்தன் ஆசானால் பேணப்பட்ட நுணுக்கமான பதிவேடுகளால் இந்த வெளியீட்டுக்குக் கணிசமான உதவி கிடைத்தது. 

மற்ற தலைப்புகள்