ஆலப்புழா

 

கிழக்கின் வெனிஸ் நகரம் என்று குறிக்கப்படுகிற, ஆலப்புழா கேரளாவின் கடற்பயண வரலாற்றில் மிகவும் முக்கியமான இடத்தினைக் கொண்டிருக்கிறது. இன்றும், அது படகு பந்தயங்களுக்கும், காயல் விடுமுறைகளுக்கும், கடற்கரைகளுக்கும், கடற்பொருட்களுக்கும், தேங்காய் நார் தொழிலுக்கும் பெயர் பெற்றிருக்கிறது. ஆலப்புழா கடற்கரை ஒரு பிரசித்தமான வெளியிட விருந்துலா (பிக்னிக்) இடமாகும்.  இங்கு கடலுகுள்ளு நீண்டு கிடக்கும் கடற்பாலம், 137 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஒன்று. விஜயா கடற்கரைப் பூங்காவில் உள்ள பொழுதுபோக்கு வசதிகள், கடற்கரைக்கு கவர்ச்சி சேர்க்கிறது. அருகில் ஒரு பழமையான கலங்கரை விளக்கும் உள்ளது, அது அனைத்து பார்வையாளர்களையும் நிறைய மகிழ்ச்சியைத் தருகிறது.

ஆலப்புழாவில் இருக்கும் போது கிடைக்கும் மற்றொரு மகிழ்ச்சியான அனுபவம், படகு வீட்டில் நீர் வழிப் பிரயாணம். நீங்கள் இப்போது ஆலப்புழாவின் காயல்களில் காணும் படகு வீடுகள் பழங்கால கெட்டுவல்லத்தின் புதிய பதிப்புகளாகும். கெட்டுவல்லம் என்பது ஒரு மலையாளம் சொல். கெட்டு என்பது குடியிருப்புக் கட்டமைப்புகளையும், வல்லம் என்பது படகினையும் குறிக்கின்றன. பண்டைய காலத்தில், மர மேலோடுகள் வேயப்பட்ட கூரைகளைக் கொண்ட கெட்டுவல்லம் அல்லது படகு,  நெல் மற்றும் நறுமணப் பொருட்களையும் ஏற்றிச் செல்வதற்காகப் பயன்படுத்தப்பட்டன.

பின்னர், படகு வீடுகள் அலங்கரிக்கப்பட்ட படுக்கையறைகள், நவீன கழிப்பறைகள், வசதிமிக்க வரவேற்பறைகள், ஒரு சமையலறை மற்றும் ஒரு பால்கனியையும் உள்ளிட்டு நல்ல ஓட்டல் அறைகள் போன்ற வசதிகளுடன் கூடியனவாக இருக்கின்றன. படகு வீட்டில் தங்கியிருக்கும் போது எந்தவிதமான இடையூறும் இன்றி காயல்களில் வாழ்க்கையை காணமுடியும்.

படகு வீடுகள்

படகு வீடுகள் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் காசர்கோடில் கிடைக்கப் பெறுகின்றன. தயவு செய்து மேலும் தகவல்களுக்கு DTPCயைத் தொடர்பு கொள்ளவும். DTPC படகுவீட்டுக்கான முன் செலுத்துதல் கவுன்ட்டர், ஆலப்புழா படகுவீடுகளை முன்பதிவு செய்வதற்கு, மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கவுன்சிலால் (DTPC) நிர்வகிக்கப்படுகிற ”டிரஸ்டட் சர்வீஸ், டிரஸ்டட் ரேட்ஸ் என்கிற படகு வீடு முன்பணம் செலுத்தும் கவுன்ட்டர்களை் பயணிகள் பயன்படுத்தலாம்.

தொடர்பு விவரங்கள்

ஆலப்புழா - படகுவீடு ப்ரீபெய்டு கவுன்ட்டர், மொபைல்: 09400051796, 09447483308, +91 477 2251796, +91 477 2253308

அங்கே செல்வதற்கு

அருகாமையில் உள்ள இரயில் நிலையம்: ஆலப்புழா அருகாமையில் உள்ள விமானநிலையம் : கொச்சி சர்வதேச விமான நிலையம், ஆலப்புழாவிலிருந்து சுமார் 85 கிமீ தொலைவில் உள்ளது.

அமைவிடம்

பரப்பாங்கு : 9.492853, நெட்டாங்கு: 76.317726

வரைபடம்

District Tourism Promotion Councils KTDC Thenmala Ecotourism Promotion Society BRDC Sargaalaya SIHMK Responsible Tourism Tourfed KITTS Adventure Tourism Muziris Heritage KTIL

கட்டணமில்லா தொலைபேசி எண்: 1-800-425-4747 (இந்தியாவிற்குள் மட்டும்)

சுற்றுலாத் துறை, கேரள அரசு, பார்க் வியூ, திருவனந்தபுரம், கேரளா, இந்தியா – 695 033
தொலைபேசி: +91 471 2321132, ஃபேக்ஸ் : +91 471 2322279, மின்னஞ்சல் : info@keralatourism.org.
அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை,© கேரளா சுற்றுலா 2017. பதிப்புரிமை | பயன்பாட்டு விதிகள். .