ஆலப்புழா – கொச்சி நீர்வழிப் பயணம்

 

கடவுளின் சொந்த தேசத்தில் நடந்து பயணிப்பது உங்களுக்கு சோர்வாக உள்ளதா? xர ஆடம்பரமான காயல் நீர்வழிப் பயணத்தின் வசதிகளை அனுபவிக்கலமா? ”கிழக்கின் வெனிஸ்” என்றும் அழைக்கப்படும், ஆலப்புழாவில் ஒரு படகு வீட்டினை நீங்கள் வாடகைக்கு எடுக்கலாம். தென்னை மரங்களும் நெல் வயல்களும் நிறைந்த, கேரளாவின் நெற்களஞ்சியம் என்று  பெரிதும் அறியப்படுகிற குட்டநாடு நீர்வழிகள் வழியாக ஓய்வாக பயணம் செய்யலாம்.

அடுத்து கேரளாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான குமரகம் நோக்கி செல்லலாம்.  குமரகமில் நீங்கள் நுழைந்ததும், நீங்கள் விந்தைகளின் மெய்யான உலகத்திற்குள் நுழைவீர்கள். சிறிய தீவுத்தொகுதிகளைக்கொண்ட இந்த சிறிய காயல் கிராமம், தனக்கான பிரத்தியே வாழ்க்கை, தனக்கென்ற மெதுவான, அமைதியான இலயத்துடன் கொண்டிருக்கிறது. காட்சிகள், ஒலிகள் மற்றும் நறுமணங்களும் சூழ்ந்து உங்களை கட்டிப்போட்டுவிடும். குமரகமில் சற்று இளைப்பாறிய பின்பு, நீங்கள்அடுத்து செல்லவிருக்கும் இடம் வைக்கம்.

வைக்கத்திற்கு போகும் வழியில் வேம்பநாடு ஏரிகள் உங்களுக்கு கிராமிய மணமுள்ள காயல் கிராம வாழ்க்கையின் காட்சிகளை வழங்குகிறது. கேரளத்தின் பெரிய காயலின் காட்சிகளைக் கண்டு ஓய்வெடுங்கள். துடிக்கும் தூய்மையான இயற்கை அழகுடன் கூடிய, பசுமையான இருபக்க வரப்புகளும் உங்களின் கண்களுக்கு விருந்தளித்து அவற்றை சோர்வடையாமல் செய்யும்.  இரு பக்கத்தின் வரப்புகளில் இருக்கும் தென்னை மரங்கள் காற்றை உங்கள் காதுகளில் மெலிதாக ஒலிக்க செய்து உங்களை ஈர்ப்பதோடு, மென்மையான சூரிய ஒளியில் தண்ணீர் உங்களை உற்சாகப்படுத்தும். வாழ்நாள் முழுவதும் அந்தக் காட்சிகளை மறக்க முடியாதபடி உங்கள் மனதில் அவை பதிவைதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

பயணத்தில் அடுத்து, பாதிராமணல் என்னும் ஒரு சிறிய தீவைக் காண்பீர்கள், அது காயல்களுக்கு நடுவே மிதந்து கொண்டிருப்பது போல தோன்றும். குறுகிய நேரத்திற்கு அங்கே நிற்கும் போது, உங்கள் வழிகாட்டி உங்களுடன் இந்தப் பகுதியை சுற்றியுள்ள பல சுவாரஸ்யமான புனைவுக் கதைகளை பகிர்ந்து கொள்வார். பயணத்தை மீண்டும் துவங்கும் போது,  அடுத்த நிறுத்தம் தண்ணீர்முக்கமாகும். இது உப்புநீர் தடுப்புக்காக (சால்ட்வாட்டர் பேரியர்) அறியப்படுகிற ஒரு கிரமமாகும். இது தண்ணீர்முக்கம் பண்ட் எனவும் அழைக்கப்படுகிறது. இந்தியாவிலேயே மிகப் பெரிய களிமண் சீரமைப்புக் குளமாகும். இந்தப் பகுதியில் பயணப்பது மற்றும்  சில சுவையான கேரள திண்பண்டங்களை சவைப்பது ஒரு அற்புதமான அனுபவமாகும்.

நாம் அடுத்து சென்று சேருமிடமான வைக்கம், பல சுவாரஸ்யமான காட்சிகளையும் அனுபவங்கைளயும் உங்களுக்கு வழங்குகிறது. கேரளாவின் பழமையான பாரம்பரியத்தின் நினைவுச்சின்னங்களை இங்கே நீங்கள் காணலாம். இந்த நகரத்தில் ஒரு பழமையான சிவன் கோவில் முதன்மையாக ஈர்க்கிறது.  இதன் பசுமை புத்துணர்வுடனான ஒரு அற்புதமான அனுபவத்தைத் தருகிறது.

வைக்கத்திலிருந்து சுவைமிகுந்த கேரள சாப்பாட்டுடன், மீள்நிரப்பிக் கொண்டு நீங்கள் அடுத்து செல்லுமிடம் கும்பளங்கி. இதற்கு நீங்கள் தைக்காட்டுச்சேரி வழியாகப் பயணிப்பீர்கள். அது ஒரு தென்னந்தோப்புகளாலும், நெல்வயல்களாலும் சூழப்பட்ட சிறிய கிராமம், காலயல் வாழ்க்கையின் கூறுகளுடன் மயங்க வைக்கிறது. கயல்களின் இரு மருங்கிலும் சீன மீன்பிடி வலைகளோடு கும்பளங்கி உங்களை வரவேற்கிறது. பொக்காலி சாகுபடி என்பது கும்பளங்கியில் பின்பற்றப்படும் தனிச்சிறப்பான விவசாய நடைமுறையாகும். இதில் நெல் அறுவடைக்குப் பின்னர் இறால் வடிகட்டுதலுக்கான ஒரு பாரம்பரியமான உள்ளூர் நடைமுறைப் பின்பற்றப்படுகிறது.

கும்பளங்கியின் இதமான காற்றுடனான காயல்களில் பயணித்து, நாம் ஃபோர்ட் கொச்சி செல்வதற்கான தருணமாகும் இது. சீன மீன்பிடி வலைகளுக்கு பெயர்பெற்ற ஃபோர்ட் கொச்சி,  பல்வேறு வரலாற்று இடங்களையும் கொண்டிருக்கிறது.  இந்த இடங்களை நடந்து சென்று பார்ப்பது சிறந்ததாகும். எனினும்,  படகு வீட்டிலிருந்து காட்சிகளைப் பார்ப்பது மனம் மயக்கும் ஒன்றாக இருக்கும். ஃபோர்ட் கொச்சிக்கு விடைகொடுத்து நாம் செல்வது போல்கட்டி தீவினை நோக்கி, அது நமது இறுதியாக சென்றடையும் இடமும் கூட.

போல்கட்டி தீவுக்கு செல்லும் வழியில் நீங்கள் எர்ணாகுளம் நகரத்தின் பரந்த காட்சியையும், அதன் விண்முட்டும்  கட்டிடங்களையும், கிழக்குப் புறத்தில் கப்பல் கட்டும் தளத்தினையும் காண்பீர்கள். போல்கட்டியை நாம் அடைந்ததும், விடைபெற்றுக்கொள்வதற்கான நேரம் வந்துவிடுகிறது. இதமான தென்றல் காற்றிலும் சூரிய ஒளியின் உறுதிமிக்க ஸ்பரிசத்திலும் மெய்மறந்து செல்லுங்கள். இந்த நீர்வழிப் பயணத்தின் நினைவு உங்கள் மனதில் பதிந்த, இதயத்தை தொட்டு வரும் எல்லா ஆண்டுகளும் வரத் தூண்டும்.

ஆலப்புழாவில் நடத்தப்படுகிற சுற்றுலாக்கள் மற்றும் காயல் நீர்வழிப் பயணங்களுக்கு, தொடர்பு கொள்ளவும்

மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கவுன்சிலைத் (DTPC) தொலைபேசி: +91 477 2253308, 2251796 மின்னஞ்சல் : info@dtpcalappuzha.com

அங்கே செல்வதற்கு

அருகாமையில் உள்ள இரயில் நிலையம்: ஆலப்புழா அருகாமையில் உள்ள விமானநிலையம் : கொச்சி சர்வதேச விமான நிலையம், ஆலப்புழாவிலிருந்து சுமார் 85 கிமீ தொலைவில் உள்ளது.

புவியியல் தகவல்

குத்துயரம் : கடல்மட்டம்

வரைபடம்

District Tourism Promotion Councils KTDC Thenmala Ecotourism Promotion Society BRDC Sargaalaya SIHMK Responsible Tourism Mission KITTS Adventure Tourism Muziris Heritage

கட்டணமில்லா தொலைபேசி எண்: 1-800-425-4747 (இந்தியாவிற்குள் மட்டும்)

சுற்றுலாத் துறை, கேரள அரசு, பார்க் வியூ, திருவனந்தபுரம், கேரளா, இந்தியா – 695 033
தொலைபேசி: +91 471 2321132, ஃபேக்ஸ் : +91 471 2322279, மின்னஞ்சல்: info@keralatourism.org.
அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை © கேரளா சுற்றுலா 2020. பதிப்புரிமை | பயன்பாட்டு விதிகள் | குக்கீ பாலிசி | தொடர்பு கொள்ளுங்கள்.
உருவாக்கி பராமரிப்பவர்கள் : இன்விஸ் மல்டிமீடியா.

×
This wesbite is also available in English language. Visit Close